ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது மதுரையில் நடந்த தடியடி குறித்து டிஜிபி பதிலளிக்க உத்தரவு

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது மதுரையில் நடந்த தடியடி குறித்து டிஜிபி பதிலளிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. பிப்ரவரி 15ம் தேதிக்குள் டிஜிபி பதிலளிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. போராட்டக்காரர்கள் கலைந்து போக அவகாசம் தராமல் போலீசார் தடியடி நடத்தியதாக மதுரை வழக்கறிஞர் கனகவேல் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். மேலும் தடியடி குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என மனுதாரர் கனகவேல் கோரிக்கை விடுத்தார்.