சென்னை: விலகிச் சென்ற தனது கணவனை சேர்த்து வைக்கக் கோரி, ஐந்தாவது நாளாக தொடரும் திரைப்படக் கவிஞர் தாமரை தர்ணா போராட்டம் கோடம்பாக்கம் அம்பேத்கர் சிலை அருகே உள்ள பூங்கா அருகில் மாற்றப்பட்டது. கணவரை சேர்த்து வைக்கக் கோரி, கடந்த வெள்ளி பிப்ரவரி 27 ஆம் தேதி காலை 11 மணி அளவில் தர்ணா போராட்டத்தை தொடங்கிய கவிஞர் தாமரை ஐந்தாவது நாளாக இன்றும் தனது போராட்டத்தை தொடர்ந்தார். வேளச்சேரி வீட்டில் இருந்தும் கணவர் தியாகு வெளியேறிவிட்டதால், தனது போராட்டத்தை கோடம்பாக்கம் அம்பேத்கர் சிலை அருகே உள்ள பூங்கா அருகில் தனது போராட்டத்தை தொடர்ந்தார். தனக்கு தீர்வு கிடைக்கும் வரை தனது போராட்டம் தொடரும் என அவர் தெரிவித்தார். இது குறித்து அவர் வெளியிட்ட பதிவு: ஐந்தாவது நாளாக இன்றும் (3.3.15) என் போராட்டம் தொடர்கிறது. இடம் : சென்னை மாநகராட்சி, கலைஞர் பூங்கா. ( ஆற்காடு சாலை, கோடம்பாக்கம் அம்பேத்கார் சிலை அருகில்). இரண்டு நாட்கள் வேளச்சேரியில் தியாகுவின் வீட்டிற்கு எதிரே இருந்தோம். அங்கிருந்தும் ஓடித் தலைமறைவாகியுள்ள தியாகு இருக்குமிடம் தெரியவில்லை. நேற்று ஓர் ஊடகத்திற்கு இந்தப் பூங்காவிலிருந்து பேட்டி அளித்ததாக அறிந்தேன். எனவே போராட்டத்தை இந்த இடத்திற்கு மாற்றிக் கொண்டேன். இதுவும் நடுத்தெருதான்.
தர்னா போராட்டத்தை கோடம்பாக்கம் பூங்காவுக்கு மாற்றினார் கவிஞர் தாமரை
‘தமிழுக்கு உழைத்தேன், தெருவுக்கு வந்து விட்டேன்’ என்ற என் செய்தியில் மாற்றமில்லை. தியாகு எங்கே இருக்கிறார் என்று தெரிந்தவர்கள் சொன்னால் அங்கே போராட்ட களத்தை மாற்றிக் கொள்ள ஆயத்தமாக இருக்கிறேன். நியாயம் கிடைக்கும்வரை போராட்டம் தொடரும். நான் மதியம் இரண்டு மணியிலிருந்து வள்ளுவர் கோட்டத்தின் வழக்கமான இடத்தில் என் போராட்டத்தைத் தொடர்கிறேன்.
Popular Categories