இனி 60கி.மீ க்கு ஒரு டோல்கேட்..

Published:

இந்திய தேசிய நெடுஞ்சாலைகளில் இனி 60 கி.மீ.,க்கு ஒருமுறை மட்டுமே சுங்கக்கட்டணம் செலுத்தும் நடைமுறை அமல்படுத்துவது குறித்து ஆலோசனை நடைபெறுவதாகவும், புதிய நடைமுறை 3 மாதத்தில் அமலுக்கு வரும் எனவும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இன்று லோக்சபாவில் தெரிவித்துள்ளார்.

images 49 1 - 2026
images 33 5 - 2026

இது தொடர்பாக லோக்சபாவில் மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியதாவது,60 கி.மீ.க்கு ஒரு முறை மட்டுமே சுங்கக்கட்டணம் செலுத்தும் நடைமுறை அமல்படுத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. சுங்கச்சாவடிக்கு அருகே வசிக்கும் கிராம மக்கள் ஆதார் அட்டையை காண்பித்தால் போதும் என்பது குறித்தும் ஆலோசனை நடக்கிறது.

ஆதார் அட்டையை காண்பித்தால் கட்டணம் செலுத்த வேண்டாம் என்பதை நடைமுறைப்படுத்துவது குறித்து இந்த ஆலோசனை நடைபெறுகிறது. 3 மாதத்தில் புதிய நடைமுறை அமலுக்கு வரும். அரசுக்கு பணம் முக்கியம் தான், அதே சமயம் மக்களும் கஷ்டபடக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து வஸ்திரம் மரியாதை!

Related articles

Recent articles

spot_img