kavini - 2026

ஆரோக்கிய உணவு: கவுனி அரிசி இனிப்பு!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
kavini - 2026

கவுனி அரிசி இனிப்பு

தேவையான பொருட்கள்:
கவுனி அரிசி – ஒரு கப் சர்க்கரை – ஒன்றரை கப்
தேங்காய் – ஒரு மூடி (துருவவும்)
நெய் – 3 டேபிள்ஸ்பூன் முந்திரி – 10.

செய்முறை:
வாணலியில் நெய்விட்டுச் சூடாக்கி, முந்திரி சேர்த்து லேசாக வறுத்துத் தனியாக வைக்கவும். கவுனி அரிசியைக் கழுவி 3 கப் தண்ணீரில் 2 மணி நேரம் ஊறவிடவும். பின்னர் அதே நீருடன் குக்கரில் வைத்து மூடி ஒரு விசில் வந்ததும், சிறு தீயில் 15 நிமிடங்கள் வைத்து இறக்கவும். குக்கரில் பிரஷர் அடங்கியவுடன் திறந்து சர்க்கரை, தேங்காய்த் துருவல் சேர்த்து, முந்திரியை நெய்யுடன் சேர்த்துக் கலந்து சூடாகப் பரிமாறவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.