health tips - 2026

அப்பாச்சி தீர்வு: பயோரியா நோய், ஒவ்வாமை, ஈர்,பேன்‌.‌!

நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
health tips - 2026

பயோரியா நோய் ஒழிய…

இரண்டு சொட்டு எலுமிச்சம்பழச்சாறு விட்டு வெறும் பிரஷ்ஷில் பல் துலக்க பல் இடுக்குகளில் உள்ள கிருமிகள் அழியும். வெந்நீரில் இரண்டு துளி எலுமிச்சம் பழச்சாறு விட்டு வாய்க் கொப்பளித்து வந்தாலும் பல் நோய் அணுகாது.

வேப்பம்பூ மருத்துவம்

வேப்பம்பூவைத் தணலில் காட்டி தலையில் வைத்துக் கட்டிக்கொள்ள ஈர். பேன் தொல்லை ஒழியும்.

ஒவ்வாமை நோய் வராமலிருக்க…

தினமும் காலையில் வெறும் வயிற்றில் வேப்பிலைக் கொழுந்துகளை வாயில் போட்டு மென்று சாறு லிழுங்கலாம். இது போன்றே துளசிச் சாறும் அதிகாலையில் சாப்பிட்டு வரலாம். இதனால் அலர்ஜி ஏற்படாது. ஆஸ்துமாவுக்கும் சிறந்த தற்காப்பு மருந்தாகும்.

மனம் உற்சாகம் பெற…

குங்குமப் பூவை தூளாக்கி 5 கிரெய்ன் அளவு தேனில் குழைத்து சாப்பிட்டு வர இரத்த சுத்தியும் மன உற்சாகமும் கொடுக்கும்.

முளைக் கீரை

சொறி, சிரங்கு உள்ளவர்கள் இக்கீரையை மிதமாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். காசத்தைப் போக்கும். நரையைத் தடுக்கும். நல்ல பசியை உண்டாக்கும்.

ALSO READ:  இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.