செங்கோட்டை: நெல்லை மாவட்டம் செங்கோட்டைக்கு இன்று காலை வந்திருந்தார் கேரளா பந்தளம் மகராஜா மகம் திருநாள் கேரள வர்ம மகராஜா.
அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது, நாளை சபரிமலை மேல் சாந்தி தேர்வு நடக்கிறது. நீதிமன்ற மேல்முறையீடு குறித்த தீர்ப்பை ஐயப்பன் பார்த்துக் கொள்வார்.
சபரிமலை குறித்த இந்தக் குழப்ப நிலைக்குக் காரணம், கம்யூனிஸ்டு மற்றும் சில அமைப்புகள் தான்! ஐயப்பன் அனைத்தையும் பார்த்துக் கொண்டுதான் உள்ளார் என்ரு கூறினார்.




