உன் இடுப்போ ஒரு உடுக்கை; உன் மார்போ ஒரு படுக்கை! வைரமுத்துவின் வார்த்தை செக்ஸ் டார்ச்சர்!

சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்

sddefault 19 - 2026

சினிமா பாடலாசிரியர் வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை பெண்கள் பலரும் வெளிப்படையாக இப்போது தெரிவித்து வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்களின் குற்றச்சாட்டு, இளம் பெண்கள் மரியாதை நிமித்தமாக அவருடன் அறிமுகப்படுத்திக் கொண்டு பேசும்போது, தமக்கும் கவிதைகள் பிடிக்கும், தமிழ் மிகவும் பிடிக்கும், உங்கள் பாடல்களின் வரிகள் நன்றாக இருந்தன என்று சொல்லி பாராட்டும் போது, அவர்களின் செல்போன் எண்களை பெற்றுக் கொண்டு நேரம்கெட்ட நேரத்தில் போனில் அழைத்து வக்கிரமாகப் பேசுவது என்பது குறித்தானது.

சிலரிடம் இரவு நேரத்தில் போன் செய்து, அங்க வர்ணனை செய்வதும், அழகாக இருக்கிறாய் என்பதும், உனக்காக ஒரு கவிதை எழுதினேன். வாசிக்கிறேன் கேள் என்பதுமாக சீண்டல்களைச் செய்திருப்பதாக பலரும் இப்போது குமுறுகின்றனர்.

அவர்களில் ஒரு பெண், வாட்ஸ்அப் ஒலிப்பதிவு மூலம் சொன்ன தகவலில், அவரிடம் கலாக்ஷேத்ராவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அறிமுகம் ஆன 24 வயது சிறு பெண்ணுக்கு, வைரமுத்து போன் செய்து, உனக்காக ஒரு கவிதை எழுதினேன். வாசிக்கிறேன் கேள் என்று சொல்லி, உன் இடுப்பு ஒரு உடுக்கை, உன் மார்போ ஒரு படுக்கை என்று சொன்னதாகவும், அதனால் அந்தப் பெண் மனதில் வலி நிறைந்து அழுது தீர்த்ததாகவும் உடன் இருந்து பார்த்த பெண் ஒருவர் அந்த ஒலிப் பதிவில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியதும், உடுக்கை‌யும் படுக்கையும் கவிப் பலான அரசு வெளிப்படுத்திய கிடக்கையும்! என்று விமர்சிக்கிறார்கள் பலர்.

‘சிறு பெண் என்றாலும், தமிழறியாத, பொருள் புரியாத பேதை என நினைத்து விட்டார் போலும் கவிஞர்’ என்றும், ‘பதிலுக்கு புடுக்கை குடுக்கை என்றெல்லாம் ரைம்ஸ் சொல்லும் பள்ளிக்குழந்தை என எண்ணிவிட்டார் போலும் கவிஞர்’ என்றும் கலாய்க்கிறார்கள் சமூக வலைத்தளங்களில்!

அந்தப் பெண் குற்றச்சாட்டு தெரிவித்து அனுப்பிய ஒலிப் பதிவு இதுதான்….

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.