ஜிப்மர் பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பில் Medical Laboratory Technologist மற்றும் Junior Administrative Assistant பணிக்கான காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவித்துள்ளது.
இப்பணிக்கு ஆர்வமுள்ள மற்றும் திறமை வாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பதிவின் மூலம் விருப்பமுள்ளவர்கள் தங்கள் பதிவுகளை செய்து கொள்ளலாம்.
காலிப்பணியிடங்கள்:
ஜிப்மர் பல்கலைக்கழகத்தில் தற்போது வெளியிடப்பட்ட அறிவிப்பில் Medical Laboratory Technologist மற்றும் Junior Administrative Assistant பணிக்கு என்று 20 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக ஒதுக்கியுள்ளது.
கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் 12ம் வகுப்பு / Bachelor டிகிரி முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் அதிகபட்சமாக 30 வயதுக்கு மிகாமல் இருப்பது அவசியம். மேலும் வயது தளர்வுகள் பற்றிய முழு தகவலுக்கு அறிவிப்பில் பார்வையிடவும்.
ஊதியம்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.19,900/- முதல் ரூ.35,400/- வரை ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு முறை:
இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் Written Test / Skill Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு ஆர்வமுள்ள மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் கீழே கொடுக்கப்பட்ட இணைப்பின் மூலம், அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்த பணிக்கு விண்ணப்பிக்க 05.01.2022 அன்றைய தினம் இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Official PDF Notification – https://jipmer.edu.in/sites/default/files/Detailed%20website%20Advertisement%20of%20Various%20Gr%20B%20%26%20C%20December%202021.pdf
Apply Online – https://cdn.digialm.com/EForms/configuredHtml/827/74465/Registration.html