December 8, 2025, 12:40 AM
23.5 C
Chennai

கைலாசாவை கூகுளில் தேடாதீங்க..: நித்தி அதிரடி!

nithi - 2025

இந்தியாவிலிருந்து வெளியேறிய நித்தியானந்தா தற்போது கைலாசா என்ற தனி தீவை உருவாக்கியிருக்கிறார். தனி தீவை உருவாக்கியது மட்டுமில்லாமல் தனி நாணயம், சட்டத் திட்டம் ஆகியவைகளை உருவாக்கி கைலாசாவுக்கு வர விசா வேண்டும், கைலாசாவிற்கு தனி விமான வசதி வேண்டுமென அறிவித்து அதிரவைத்தார்.

இந்தத் தீவானது ஈக்வடார் நாட்டில் இருப்பதாக தகவல் வெளியானாலும் அதை அந்நாட்டு அரசாங்கம் இதுவரை உறுதிப்படுத்தவில்லை. எங்கு இருக்கிறார் என்று தெரியாமல் இருந்தாலும் ஆன்லைன் மூலம் அவரது பக்தர்களுக்கு காட்சி தந்து சொற்பொழிவும் நிகழ்த்துகிறார். இந்த வீடியோக்களும் ஏதோ காரணத்திற்காக வைரலாகிவிடும்.

அந்த வகையில், கைலாசா தீவு எங்கு உள்ளது என்பது குறித்தும், கைலாசாவில் பக்தர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு வசதிகள் குறித்து நித்தியானந்தா சமீபத்திய வீடியோ ஒன்றில் பேசியுள்ளார். தற்போது அது இணையத்தில் வட்டமடித்து வருகிறது.

அதில், கைலாசாவில் தன் சீடர்களுக்கு சிறந்தவைகளை மட்டுமே வழங்கி வருகிறோம். அனைத்து சீடர்களுக்கு தனி தனி அறைகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பாக இருக்கிறார்கள். ஆனால், எனது அறையில் மட்டுமே கதவுகள் கூட கிடையாது. யாராவது நடந்து வந்து என்னிடம் எது குறித்தும், எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசலாம்.

ஏனென்றால் எனக்கென்று அறைகள் எதுவும் இல்லை. நான் அறை எதுவும் விரும்பாமல் ஹாலில் தங்கி இருக்கின்றேன். இதுதான் எங்கள் கைலாசாவின் வடிவமைப்பு என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், நான் ஹாலில் உள்ள ஊஞ்சலில் உட்கார்ந்துகொண்டு ஒரு பக்கம் பனிபடர்ந்த மலையையும், மறுபக்கம் கடலையும் ரசித்து வருகிறேன். இப்படி நான் சொன்னவுடன் உடனே கூகுளில் பனிபடர்ந்த மலையும், கடலும் எங்கே இருக்கிறது என்று யாரும் தேடாதீர்கள் என்று காவல்துறையினரை கலாய்க்கும் விதமாக பேசியுள்ளார்.

முன்னதாக, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் கிழக்கு கோபுரம் அருகே உள்ள நித்தியானந்த ஆசிரமத்தில் உள்ள அவரது சீடர்கள் நித்தியானந்தா கைலாச நாட்டில் இருந்தே சித்திரை திருவிழாவை காண்பதற்காக நேரலை வசதியை ஏற்படுத்தினார்.

மேலும் நித்தியானந்தாவின் தான் சித்திரை திருவிழாவை காண்பதனை நேரலையில் பொதுமக்கள் பார்வைக்கு வைத்து, பக்தர்களுக்கு அறுசுவை பிரசாதங்களை வழங்கவும் அறிவுறுத்தினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

Topics

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories