
இன்று ( 05.11.2022 ) மாலை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆலயம் காப்போம் அமைப்பின் சார்பில் ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதஸ்வாமி திருக்கோவிலில் மரபுகளைகாத்திட கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தேசியச் செயலாளர் ஹெச். ராஜா, புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, காங்கிரஸ் கட்சியின் அமெரிக்கை நாராயணன், ஒரேநாடு இதழ் ஆசிரியர் இராம நம்பி நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டு உரை ஆற்றினர்.
ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாத சுவாமிக்கு திருவாராதன பூஜைகள், புறப்பாடுகள் ஆகம, மரபு வழி நீண்ட கால பழக்கபடி பகவத் ஸ்ரீராமாநுஜர் வகுத்த நெறிமுறைகள் மாறாமல் குறித்த நேரத்தில் நடைபெற்றிட வேண்டும்.
ஸ்ரீரங்கநாதசுவாமிக்கு திருக்கோவில் நிர்வாக திட்ட வழிகாட்டுதல் படி தளிகை, பிரசாதங்கள், அமுதுபடிகள் அளவு, தரம் குறையாது அதற்குரிய பூஜை காலங்களில் முறையாக நடத்திட வேண்டும்.
ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாத சுவாமி,ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி உடனுறை ஸ்ரீஜம்புகேஸ்வரசுவாமி திருக்கோவில்களை உள்ளடக்கிய மிகப் பழமையான இத் தீவினை பாரம்பரிய, மரபு மாறாமல் காத்திட புனித தீவாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.

ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாத சுவாமி திருக்கோவில் நிர்வாக சட்டம் 1942ன் படியும் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை சட்டப்படியும் பரம்பரை அறங்காவலர்கள் மட்டுமே சுழல் முறையில் அறங்காவல் குழு தலைவராக (Chairman board of Trustees) பொறுப்பு வகிக்க தமிழக அரசு வழிவகை செய்யவேண்டும். சுழல் முறையாக பரம்பரை அறங்காவலர்கள் பொறுப்பேற்பது கடந்த நான்கைந்து ஆண்டுகளாக தடை செய்யபட்டு இருக்கிறது.
இந்து சமய அறநிலையத் துறையால் நியமனம் பெறும் பரம்பரை அல்லாத அறங்காவலர்களாக திருக்கோவில் மரபுகளை அறிந்த, பல சமூகங்களை உள்ளடக்கிய உள்ளுர் நபர்களை பொறுப்பேற்க தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
நம்பெருமாள் கட்டளையால் ஸ்ரீபராசர, ஸ்ரீவேதவ்யாஸ பட்டர்கள் அரையர்களுக்கு நடத்தப்படும் பிரம்மரத மரியாதையை (தோளில் சுமப்பது-பட்டணபிரவேசம்) எவ்வித இடையூறும் இன்றி நடத்திட வழிவகை செய்ய வேண்டும்.
திருக்கோவிலின் எவ்வித பணியாளராகவும் இல்லாமல் தேவஸ்தான அதிகாரிகளுக்கு வசூல் ஈட்டி தந்து வாலண்டரி சர்வீஸ் என்ற பெயரில் இயங்கும் அடியாட்களை உடனடியாக வெளியேற்றுவது, பணி ஓய்வு பெற்றாலும் தனியார் கம்பெனிகளின் சம்பளத்தில் ஏஜன்டுகளாக, ஒட்டுண்ணிகளாக இருந்து கொண்டு தங்களின் சுயவிருப்பு வெறுப்பு படி அடுத்தடுத்து வரும் அதிகாரிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து கொண்டு கோவில் பூஜை, மரபுகளை சரி வர செய்ய விடாமல் தடுக்கும் நபர்களையும் வெளியேற்ற வேண்டும்.
ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாத ஸ்வாமி திருக்கோவில் செயல் அலுவலராக எட்டு ஆண்டுகளாக பணியாற்றிய போது திருக்கோவிலின் ஆகம பூஜைகள், திருவிழாக்கள். புறப்பாடுகள் நீண்ட கால பழக்க வழக்கங்கள் வைணவ மரபுகளை சீர்குலைத்தும், இறைபணிசெய்பவர்களுக்குள் பிரிவினை சூழ்ச்சியை அமல்படுத்தியும் தனது சட்டவிரோத குற்ற நடவடிக்கைகளை மறைக்க தற்போது சென்னை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் இணை ஆணையராக (திருப்பணி) பணியாற்றினாலும் திரைமறைவில் ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாத ஸ்வாமி திருக்கோவிலை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள பொன்.ஜெயராமனை பணி நீக்கம் செய்து ஸ்ரீரங்கம் கோவில் மரபுகளை காத்திட வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.