
மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற கோரி, இருபதுக்கும் மேற்பட்ட சங்கங்கள் இணைந்து காலை முதலே கடைகள் அடைத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரை-விருதுநகர் தேசிய நெடுஞ்சாலையில் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடி செயல்பட்டு வருகிறது. இந்த சுங்கச்சாவடி திருமங்கலம் நகர் எல்லைப் பகுதியில் 4 கிலோமீட்டர் தூரம் இருக்க வேண்டும் ஆனால், 2மீட்டர் தொலைவில் இப்பதால் அதனை வேறு இடத்துக்கு மாற்றக்கோரி திருமங்கலம் மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து, தற்பேது திருமங்கலம் நகர் எல்லைக்கு மிகவும் அருகில் விதிகளுக்கு முரணாக கப்பலூர் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு இருப்பதை ஒப்புக்கொண்டது தேசிய நெடுஞ்சாலை ஆணையம். திருமங்கலம் நகர் மற்றும் தேசிய நெடுஞ்சாலை உள்ள டீ.கல்லுப்பட்டி பேரையூர் பகுதி வரை உள்ளூர் வாகனங்கள் இலவசமாக பயணம் செய்ய அன்றைய ஒப்பந்ததாரர் ஒத்துழைப்புடன் அனுமதி அளிக்கப்பட்டது.
ஆனாலும், அவ்வப்போது உள்ளூர் வாகனத்துக்கும் சுங்கச்சாவடி ஊழியர்கள் கட்டணம் வசூலிக்க தொடங்கியது.
இதனால், அடிக்கடி சுங்கச்சாவடியில் பிரச்சினை ஏற்பட்டு வந்தவன்மே இருந்தது.
இதனால், திருமங்கலத்தில் உள்ள இருபதுக்கும் மேற்பட்ட சங்கங்கள் சார்பாக இன்று கடையடைப்பு போராட்டம் மற்றும் திருமங்கலம் ராஜாஜி சிலைமுன்பு 500 க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதற்காக காலை முதலே திருமங்கலம் நகர் பகுதிகளான காய்கறி சந்தை ஆட்டு சந்தை உள்ளிட்ட நகர் பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளது. இதனால், திருமங்கலம் பகுதி மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் கிராமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
இதனால் பாதுகாப்பு கருதி, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவப்பிரசாத் உத்தரவின் பெயரில், திருமங்கலம் நகர் பகுதியில் 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.