
சங்கரன்கோவில் ரயில் நிலையத்தில் சாரைப் பாம்பின் வாயிலிருந்து அணில் குஞ்சை மீட்ட பாம்பு மீட்பாளரும், தாய் அணில் தனது அணில் குஞ்சை மீட்க சுற்றி சுற்றி வரும் காட்சியும் அங்கிருந்த பயணிகளை மெய்சிலிர்க்க வைத்தது.
சங்கரன்கோவில் ரயில் நிலையத்தில் பயணிகள் நிற்கும் நிழற் கூரையில் அணில் கூடு கட்டி முட்டையிட்டு குஞ்சு பொரித்து இருந்தது. இதை தனது நுண்ணுர்வால் அறிந்த சாரைப் பாம்பு கூண்டோடு அணில் குஞ்சை கவ்வி அதை முழுங்க முடியாமல் திணறியது.
நிழற்கூரைக்கு கீழே நின்ற பயணிகள் சாரைப்பாம்பு தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்ததும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். சிலர் பாம்பு மிட்பாளர் பரமேஸ்தாஸுக்கும் தகவல் அளித்தனர். உடனே பரமேஸ் தாஸ்
ரயில் நிலையத்திற்கு விரைந்து சென்றார். இதனிடையே செங்கோட்டையில் இருந்து சென்னை செல்லும் பொதிகை ரயில் வரும் நேரம் என்பதால் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.
இதைத் தொடர்ந்து அங்கு வந்த பாம்பு வேட்பாளர் பரமேஸ் தாஸ் ஏணி மூலம் மேற்கூரையில் தொங்கிக் கொண்டிருந்த சாரைப்பாம்பை மீட்டார். பின்னர் அதன் வாயில் சிக்கியிருந்த அணில் கூண்டை மெதுவாக வெளியே எடுத்தார்.கூண்டுக்குள் அணில் குஞ்சு உயிரோடு பத்திரமாக இருந்தது. உடனே அணில் குஞ்சை அங்கிருந்த நடைமேடையில் விட்டார். அப்போது அணில் குஞ்சு உயிரோடு இருப்பதை அறிந்த தாய் அணில், தனது குஞ்சு அணிலை மீட்க அங்குமிங்கும் சுற்றிச் சுற்றி வந்தது அங்கிருந்த பயணிகளை மெய்சிலிர்க்க வைத்தது.
கிடைத்த இறையை விழுங்க முடியாமல் உயிருக்கு போராடிய பாம்பு, அதன் வாயில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அணில் குஞ்சு. இரண்டையும் மீட்ட சூழலியல் ஆர்வலரும் பாம்பு மீட்பாளருமான பரமேஸ் தாசை அங்கிருந்த பயணிகள் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.