விஜயகாந்த்துக்கு முழு அதிகாரம் : தேமுதிக பொதுக்குழுவில் தீர்மானம்

 
பெரம்பலூரில் தேமுதிக.,வின் மாநில செயற்குழு பொதுக்குழு கூட்டம் விஜயகாந்த தலைமையில் இன்று காலை தொடங்கியது. இந்த கூட்டத்தில் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். வெள்ளத்தால் உயிரிழந்தவர்களுக்கு பெரம்பலூரில் தேமுதிக செயற்குழு கூட்டத்தில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
நடைபெற்ற கூட்டத்தில் முக்கியமாக தேர்தல் கூட்டணி மற்றும் கட்சியின் எதிர்கால செயல்பாடுகள் குறித்து விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார்.
விஜயகாந்த் தலைமையில் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில் மொத்தம் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செம்பரம்பாக்கம் ஏரியை முன்னேற்பாடுகளின்றி திறந்து விட்டதை கண்டித்தும், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளத்தால் உடைகளை இழந்தவர்களுக்கு அவற்றை அரசே இலவசமாக வழங்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.தமிழக அரசின் கடன் சுமை சுமார் நான்கரை லட்சம் கோடியாக அதிகரித்து இருப்பதற்கு கண்டனம் தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
 
சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக முடிவெடுக்கும் முழு அதிகாரத்தையும் தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு அளித்து, அக்கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
 
ஊழல், விலை வாசி உயர்வை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும், தமிழக மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண கோரியும் தேமுதிக கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கிய மத்திய அமைச்சர்களுக்கு நன்றி தெரிவித்தும் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது