காதலனை அடித்து விரட்டியடித்து மாணவியை கடத்தி கற்பழித்த 3 வாலிபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

 
மதுரை மாவட்டம் விராட்டிப்பத்து பகுதியை சேர்ந்தவர் 17 வயதான இளம் பெண் அங்குள்ள ஒரு பள்ளியில் பிளஸ்–1 வகுப்பு படித்து வரு மாணவியும் அதே பகுதியை சேர்ந்த 22 வயது வாலிபரும் காதலர்கள். அவர்கள் இருவரும் அடிக்கடி வெளியே செல்வது வழக்கம்.அதே போல் நேற்று மதியம் இருவரும் மதுரை அருகே வடிவேல்கரை பகுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள கோவிலுக்கு சென்று பேசி கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த 3 வாலிபர்கள் காதலனை அடித்து விரட்டி விட்டு காதலியை குண்டுகட்டாக தூக்கி கோவில் அருகே உள்ள பாலத்தின் கீழ் கடத்தி சென்று அங்கு வைத்து மாணவியை ஒருவர் பின் ஒருவராக 3 பேரும் மாறி மாறி கற்பழித்தனர்.
கற்பழிப்பு சம்பவம் குறித்து மாணவி நாகமலைப்புதுக்கோட்டைகாவல் நிலையத்தில் அளித்த புகாரில் வடிவேல்கரையை சேர்ந்த பிரபு (24), கீழக்குயில்குடி சவுந்திரபாண்டி (35), முனியாண்டி ஆகிய 3 பேர் தன்னை கடத்தி சென்று கற்பழித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் (பொறுப்பு) கமலி, இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். தப்பி ஓடிய 3 வாலிபர்களை காவல் நிலையத்தினர் தீவிரமாக வலைவீ சி தேடி வருகின்றனர்