இன்று… உலக மீனவர் தினம்!

சற்றுமுன் துணுக்குகள் லைஃப் ஸ்டைல்
fishermen 1 - 2026

நவ.21 இன்று உலக மீனவர் தினம். இதை முன்னிட்டு பலரும் மீனவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

#மீனவர் தின வாழ்த்துக்கள்.. என்று இதை முன்னிட்டு இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் தனது வாழ்த்தினைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்.

இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செயலாளர் நா.ஆனந்த் கூறியபோது… மாநில அரசே மத்திய அரசே மீனவர்களைபழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும்!

உலகில் பறந்து விரிந் துகிடக்கும் கடலை நம்பி, பல லட்சம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். கடலில் இருந்து மனிதனுக்குத் தேவையான உணவுப் பொருள்கள் முதல் ஆடம்பரப் பொருள்கள் வரை கடல் வழங்கிவருகிறது.

இந்நிலையில், எதிர்காலத்தில் மனித குலத்துக்குத் தேவையான உணவில் 90 சதவிகிதம் கடலிலிருந்தே பெறப் போகிறோம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அத்தகைய கடல் உணவுகளை மழை, வெயில், புயல் எனப் பாராது கரைக்குக் கொண்டுவந்து சேர்ப்பவர்கள் மீனவர்கள். அந்த மீனவர்களுக்கான தினமாக இன்றைய தினத்தை மீனவர்கள் கடைபிடித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.