ஆசையும், கோபமும்.. படுத்தும் பாடு! கடந்திட இவ்வழியினை நாடு!

ஆன்மிகச் செய்திகள் ஆன்மிகம்
kobam - 2026

நாம் எல்லோரும் எப்பொழுதும் ஏதாவது ஒரு காரியத்தை செய்து கொண்டே இருப்போம் ஒரு காரியம் செய்யாமல் யாரும் சும்மா இருப்பதில்லை.

பகவான் கீதையில் நஹி கச்சித் க்ஷண மபி ஜாது திஷ்ட்டத்யகர்மக்ருத் என்று சொன்னார் ஒன்றும் செய்யாமல் சும்மா இருப்பவன் உலகத்தில் கிடையாது

ஒரு பைத்தியக்காரன் கூட அவனுடைய பார்வையில் ஏதாவது செய்து கொண்டிருப்பான் அவன் என்னவோ பெரிய காரியம் செய்வதாக எண்ணிக் கொண்டிருப்பான் அவனைப் பைத்தியம் என்று நாம் கூறுவோம் ஆனால் அவன் சீரியஸாக காரியம் செய்து கொண்டிருப்பான்

அப்படி உலகத்தில் எல்லோரும் ஏதாவது ஒரு காரியத்தை செய்து கொண்டே இருப்பார்கள் எந்த காரியத்தை ஆரம்பிக்கும் போது நமது மனதில் எண்ணம் ஒன்று இருக்கும் அது இந்த காரியம் விக்கினமின்றி முடிய வேண்டும் என்ற எண்ணம் நடுவில் ஏதாவது ஒரு தடங்கல் வருமோ என்று நாம் அச்சப்படுவோம்

அதனால் நம் முன்னோர்கள் ச்ரேயா ஸிபஹு விக்னானி என்று சொன்னார்கள் ஸ்ரேயப் பதமான காரியங்களில் 10 பேருக்கு நல்லது உண்டாகக் கூடிய காரியங்களை ஆரம்பித்தால் விக்னங்கள் வருவது இயற்கை.

krishnar 1 - 2026

இது எதனால் என்றால் மனிதனுடைய எண்ணம் விசித்திரமாக இருக்கும் என்ன விசித்திரம் எல்லோரும் கூட தனக்கு நல்ல பெயர் வரவேண்டும் என்று ஆசை. இன்னொருத்தனுக்கு நல்ல பெயர் வரக் கூடாது என்றும் ஆசை. இப்படி இரண்டு ஆசைகள் மனிதனுக்கு.

தனக்கு நல்ல பேர் வர வேண்டும் ஆனால் எந்த காரியத்தை ஆரம்பித்தாலும் அது நன்றாக நடக்க வேண்டும் என்று ஆரம்பித்தால் அதற்கு ஏதாவது முட்டுக்கட்டை போட்டு கொண்டே இருப்பான் ஏனென்றால் அவனுக்கு ஏதாவது நல்ல பெயர் வந்து விட்டால் என்ன செய்வது என்பதை அவனுடைய சுபாவமாக இருக்கும்.

இப்படி மற்றவருக்கும் தனக்கு நல்ல பெயர் வேண்டும் அடுத்தவனுக்கு கூடாது என்ற எண்ணம் இருக்கும்.

மனிதனுக்கு வாழ்க்கையில் ஆசைகள் ஒன்றுக்கு பின் ஒன்று உண்டாகி கொண்டே இருக்கும் ஒவ்வொரு ஆசையையும் நாம் நிறைவேற்றிக் கொண்டே இருப்போம்

bharathi theerthar - 2026

உடனே மற்றொரு ஆசை ஏற்படும் இந்த ஆசைகளைப் பற்றி முன்னோர்கள்
ந ஜாது காமானாமுபயோகேன சாம்யதி!
ஹவிஷா க்ருஷ்ணவர்த்மேவ பூய ராவாபி வர்த்ததே!!

என்று சொன்னார்கள்

அதாவது ஆசையை நிறைவேற்றினால் அத்துடன் நிற்காது அது இன்னும் வளர்ந்து கொண்டே இருக்கும் அக்கினியில் நெய் விட்டால் எப்படி எரியுமோ அதுபோல ஆகையால் ஆசைகளை நிறைவேற்றி அதை குறைக்க வேண்டும் என்பது சரி அல்ல அது உண்டாகாமல் செய்து கொள்வதுதான் சரி

அதைப்போல கோபம் மனிதனுக்கு விசேஷமான சத்துரு சின்ன சின்ன விஷயத்திற்கு கோபித்துக்கொண்டு இருப்பார்கள் அதனால் மிகவும் அனர்த்தங்கள் நிகழும் கோபத்திற்கு இடம் கொடுக்கக்கூடாது காம குரோதங்களை எப்படி நீக்குவது என்று கேட்டால் அதற்கு வைராக்கியமும் பொறுமையும் இருக்கவேண்டும்

விரக்தியினால் காமத்தையும் பொறுமையால் குரோதத்தையும் தடுக்கமுடியும் காம குரோதங்களை விட்டவனுக்கு தான் வாழ்க்கையில் உண்மையான சுகம் இருக்கும் அவன்தான் சரியான மனிதன் இந்த நிலைமை அடைவதற்கு எல்லோரும் முயற்சிக்க வேண்டும்.

சக்னோதிஹைவ ய: ஸோதும் ப்ராக் சரீர விமோசணாத்!
காம க்ரோதோத்பவம் வேகம் ஸ யுக்த: ஸ ஸுகீ நர:

அதனால் ஆசையையும் கோபத்தையையும் விட்டுவிட்டு மேலான குணங்களைப் பெற்று பகவான் கிருபைக்கு பாத்திரமாகுங்கள் என்று அருளுரைக் கூறினார்கள் மகாசன்னிதானம் ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த சுவாமிகள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.