இன்று சர்வதேச செவிலியர் தினம்! கொரோனாவுக்காக உழைக்கும் வீரர்களின் நினைவில்!

உலகம் சற்றுமுன் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
10 May 12  nurse day
10 May 12 nurse day

இன்று சர்வதேச “செவிலியர்” தினம். மிகப் பெரிய பணக்கார குடும்பத்தில் பிறந்த “பிளாரன்ஸ் நைட்டிங்கேல்” என்பவர் கையில் விளக்கை ஏந்தி போர்களத்தில் அடிபட்ட வீரர்களை கவனித்த விதமே , அன்றைய கால கட்டத்தில் இவரின் சாதனை.

மே 12, 1820 ல் பிறந்தார். இன்று அவரின் 200 வது பிறந்த நாள். இந்த நாளை கௌரவிக்கும் விதமாக உலக செவிலியர் தினம் கொண்டாடப் படுகிறது.
1860 ல் முதன்முதலில் செவிலியர் பயிற்சி வகுப்பைத் துவக்கினார். கடந்த 1867 ம் ஆண்டு இந்தியா வந்து , டில்லியில் உள்ள செயின்ட் ஸ்டீவன்ஸ் மருத்துவ மனையில் நர்சுகளுக்கான முதல் பயிற்சி வகுப்பை துவக்கி வைத்தவர்.
சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியில் இவரின் ஆலோசனைப்படி தான் கட்டப்பட்டது என்றால் இவரின் சிறப்பை நாம் அறியலாம்.

உலகெங்கும் பெண்கள்தான் அதாவது 90விழுக்காடு பெண்கள்தான் செவிலியராகப் பணி புரிந்து வருகிறாராகள். இன்று உலகில் 3 கோடி செவிலியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்களின் பொறுமையும், பணிவான சேவையும்தான் மருத்துவர்களின் சேவையைவிட சிறப்பானது. இவர்களின் தன்னலமற்ற சேவைதான் நோயாளியை விரைவில் குணப்படுத்துகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரையில் 50சதவீதத்திற்குமேல் செவிலியர் மற்றும் மிட்ஓய்ப் தான். இந்தியாவில் இந்த கொரோனா கால கட்டத்தில் எத்னையோ ஏச்சுக்களையும், பேச்சுக்களையும்,சில சமயம் வீணர்களின் கல்லடிகளையும் தாங்கிக் கொண்டு அவர்கள்ஆற்றிய பணி போற்றுதலுக்குரியது. அவர்களது சேவையை மதித்து அவர்களை வாழ்க! வாழ்க! என்று மனதார வாழ்திடுவோம். வளர்க அவர்களின் தொண்டு.

செவிலியர்கள் அனைவருக்கும் “செவிலியர் தின நல் வாழ்த்துகளை” தெரிவிப்போம்.

  • கி.வெங்கட்ராமன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.