ஈரான் அதிபர் ரைசி சென்ற ஹெலிகாப்டர் விபத்து; தேடும் பணி தீவிரம்!

Published:

iran raizi - 2026
#image_title
  • ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர் ஜோல்பா என்ற இடத்தில் விபத்துக்குள்ளானதால் பரபரப்பு
  • தெஹ்ரானில் இருந்து கிட்டத்தட்ட 600 கி.மீ. தூரத்தில் கிழக்கு அஜர்பைஜானில் உள்ள ஜோல்ஃபாவில் விபத்துக்குள்ளானதாக தகவல்
  • ஈரான் அதிபருடன் அந்நாட்டு அமைச்சர் உசேன் உள்ளிட்டோர் பயணித்ததாக தகவல்
  • அதிபரின் கான்வாயில் சென்ற 2 ஹெலிகாப்டர்களில் பயணித்த 2 அமைச்சர்கள், அதிகாரிகள் பத்திரமாக உள்ளதாக தகவல்
  • மோசமான வானிலையால், விபத்து நடந்த இடத்திற்கு மீட்புப்படையினர் செல்வதில் சிக்கல், டிரோன்கள் மூலம் மீட்புப் பணி தீவிரம்- அதிகாரிகள்

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியை பயணித்த ஹெலிகாப்டர் கடினமாக முறையில் தரையிறங்கி விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

63 வயதான ரைசி, முன்னதாக ஈரான் நாட்டின் நீதித்துறையை வழிநடத்தியவர் ஈரானின் 2021 ஜனாதிபதித் தேர்தலில் ரைசி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஈரானிய அரசு தொலைக்காட்சி வெளியிட்டுள்ள செய்தியின்படி, ஈரானின் கிழக்கு பகுதியில் அஜர்பைஜான் மாகாணத்தில் ஹெலிகாப்டரில் ரைசி பயணம் செய்து கொண்டிருந்தார்.

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

ஈரானிய தலைநகர் தெஹ்ரானில் இருந்து வடமேற்கே சுமார் 600 கிலோமீட்டர் தொலைவில், அஜர்பைஜான் எல்லையில் உள்ள ஜோல்ஃபா நகருக்கு அருகில் இந்த சம்பவம் நிகழ்துள்ளதாக தெரிவித்துள்ளது.

விபத்து நடந்த இடத்துக்கு மீட்புப் படையினர் விரைந்துள்ளனர், ஆனால் அந்த பகுதியில் மோசமான வானிலை காரணமாக சம்பவ இடத்துக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அரஸ் ஆற்றின் மீது இரு நாடுகளும் இணைந்து கட்டிய அணையை அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ்வுடன் திறந்து வைப்பதற்காக ரைசி இன்று அதிகாலை அஜர்பைஜானுக்கு வருகை தந்து திரும்பியபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

ALSO READ:  சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

Related articles

Recent articles

spot_img