60ம் நாள்: ஐபிஎல் 2024 – 19.05.2024
- முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டம் ஹைதராபாத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்றது. இரண்டாவது ஆட்டம் கௌஹத்தியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்றது. கௌஹாத்தி ஆட்டத்தின் தொடக்கம் மழையால் தாமதமானது.
பஞ்சாப் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத்
பஞ்சாப் அணியை (214/5, பிரப்சிம்ரன் சிங் 71, அதர்வா தாடே 46, ரிலீ ரோஸ்கோ 49, ஜிதேஷ் ஷர்மா 32*, நடராஜன் 2/33) ஹைதராபாத் அணி (19.1 ஓவரில் 215/6, அபிஷேக் ஷர்மா 66, கிளாசன் 42, ராகுல் திரிபாதி 33, நிதீஷ் குமார் ரெட்டி 42, அர்ஷதீப் சிங் 2/37, ஹர்ஷல் படேல் 2/49) 4 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
பூவாதலையா வென்ற பஞ்சாப் அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்கள் அதர்வா தாடே (27 பந்துகளில் 46 ரன், 5 ஃபோர், 2 சிக்சர்) மற்றும் பிரப்சிம்ரன் சிங் (45 பந்துகளில் 71 ரன், 7 ஃபோர், 4 சிக்சர்) சிறப்பான தொடக்கம் தந்தனர். ரிலீ ரோஸ்கோ (24 பந்துகளில் 49 ரன், 3 ஃபோர், 4 சிக்சர்), ஷஷாங்க் சிங் (2 ரன்), திதேஷ் ஷர்மா (15 பந்துகளில் 32 ரன், 2ஃபோர், 2 சிக்சர்), அஷுதோஷ் ஷர்மா (2 ரன்), ஷிவம் சிங் (2 ரன்) என அனத்து பஞ்சாப் அணி பேட்டர்களும் நன்றாக ஆடினர். இதனால் 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 5 விக்கட் இழப்பிற்கு 214 ரன் எடுத்தது.
215 ரன் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு ட்ராவிஸ் ஹெட் (பூஜ்யம் ரன், கோல்டன் டக்) முதல் பந்தில் கிளீன் போல்ட் ஆகி, ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். ஆனால் மற்றொரு தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா (28 பந்துகளில் 66 ரன், 5 ஃபோர், 6 சிக்சர்) சிறப்பாக ஆடினார். மூன்றவதாகக் களமிறங்கிய ராகுல் திரிபாதி (18 பந்துகளில் 33 ரன், 4 ஃபோர், 2 சிக்சர்), நிதீஷ் குமார் ரெட்டி (25 பந்துகளில் 37 ரன், 1 ஃபோர், 3 சிக்சர்), ஹென்றிச் கிளாசன் (26 பந்துகளில் 42 ரன், 3 ஃபோர், 2 சிக்சர்), ஷாபாஸ் அகமது (3 ரன்), அப்துல் சமது (11 ரன்), சன்வீர் சிங் (6 ரன்) என அனிவரும் சிறப்பாக ஆடியதால் 20 ஓவர்களில் ஹதராபாத் அணி 6 விக்கட் இழப்பிற்கு 215 ரன் அடிக்க முடிந்தது. இதனால் அந்த அணி 4 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் ஹைதராபத் அணி பிளே ஆஃப் சுற்றுக்குள், புள்ளிப்பட்டியலில் 17 புள்ளிகளுடன் சிறப்பான ரன்ரேட்டுடன் நுழைகிறது. பஞ்சாப் அணி போட்டியில் இருந்து வெளியேறுகிறது.
ஹைதராபத் அணியின் அபிஷேக் ஷர்மா தனது சிறப்பான பேட்டிங்கிற்காக ஆட்டநாயகன் விருது பெற்றார். இத்துடன் லீக் சுற்று ஆட்டங்கள் நிறைவுபெற்றன. செவ்வாய்கிழமை அன்று அகமதாபாத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் (புள்ளிப்பட்டியலில் இரண்டாமிடம்) கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் (புள்ளிப்பட்டியலில் முதலிடம்) இடையே ஆட்டம் நடைபெறும்.
கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ்
கௌஹாத்தியில் ஏற்பட்ட மழை காரணமாக கொல்கொத்தா மற்றும் ராஜஸ்தான் இடையிலான ஆட்டம் இன்று கைவிடப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது. இதனால் 20 புள்ளிகளுடன் கொல்கொத்தா அணி முதலிடத்தில் இருக்கிறது. ராஜஸ்தான் அணி 17 புள்ளிகள் மற்று ஹைதராபாத் அணியைவிட குறைவான் ரன்ரேட்டுடன் மூன்றாம் இடத்தில் இருக்கிறது.
19.05.2024 அன்று நிலவரப்படி புள்ளிப்பட்டியல்
அணி | ஆ | வெ | தோ | புள்ளி | நெட் ரன் ரேட் |
கொல்கொத்தா | 14 | 9 | 3 | 20 | 1.428 |
ஹைதராபாத் | 14 | 8 | 5 | 17 | 0.414 |
ராஜஸ்தான் | 14 | 8 | 5 | 17 | 0.273 |
பெங்களூரு | 14 | 7 | 7 | 14 | 0.459 |
சென்னை | 14 | 7 | 7 | 14 | 0.392 |
டெல்லி | 14 | 7 | 7 | 14 | -0.377 |
லக்னோ | 14 | 7 | 7 | 14 | -0.667 |
குஜராத் | 14 | 5 | 7 | 12 | -1.063 |
பஞ்சாப் | 14 | 5 | 9 | 10 | -0.353 |
மும்பை | 14 | 4 | 10 | 8 | -0.318 |