2 வது மனைவியின் நகை பணத்தோடு முதல் மனைவியுடன் தலைமறைவு!

உள்ளூர் செய்திகள் கிரைம் நியூஸ் சென்னை தமிழகம்
Screenshot_2020_0820_152207

சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த 32 வயதான பூரணலட்சுமி என்ற பெண்ணின் கணவர் கடந்த 2008 ஆம் ஆண்டு உயிரிழந்ததை அடுத்து பூரணலட்சுமி கோபிநாத் என்ற நபரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் அர்ச்சனா என்ற பெண் ஒருவர் கடந்த மே மாதத்தில் பூரணலட்சுமியின் வீட்டிற்குள் புகுந்து நான் தான் கோபிநாத்தின் முதல் மனைவி என்று சண்டை போட்டு உள்ளார்.

அப்போது தான் பூரணலட்சுமி விசாரிக்கையில் அர்ச்சனா தான் கோபிநாத்தின் முதல் மனைவி என்றும் இந்த உண்மையை கோபிநாத் கடந்த 12 ஆண்டுகளாக மறைத்து வைத்துள்ளார் என்பது தெரிய வந்தது.

இதனால் கோபம் அடைந்த பூரணலட்சுமி தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

அதன் பிறகு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பூரணலட்சுமி தனது வீட்டிற்கு வந்து பார்த்தபோது கோபிநாத் வீட்டில் இருந்த நகை மற்றும் சான்றிதழ்களை எடுத்து கொண்டு தனது முதல் மனைவியுடன் ஓடிவிட்டார் என்பதை அறிந்த பூரணலட்சுமி அதிர்ச்சி அடைந்தார்.

இதனை அடுத்து பூரணலட்சுமி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரை ஏற்ற போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.