நடுச்சாலையில் பாம்பும் கீரியும் பயங்கர சண்டை! வைரல் வீடியோ!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
Screenshot_2020_0820_153351

நடுரோட்டில் பாம்புக்கும் கீரிக்கும் இடையே நடக்கும் பயங்கர சண்டை ட்விட்டரில் வைரலாகி வருகிறது. இதை வாகனஓட்டிகளும் தங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு அச்சத்துடன் பார்த்தனர்.

Screenshot_2020_0820_153417

பாம்பும் கீரியும் ஒன்றுக்கு ஒன்று எதிரிகள். இருவர் சண்டையிடும் பொழுதோ அல்லது பகைமை பாராட்டிக் கொள்ளும் பொழுதோ கீரியும் பாம்பும் போல என்று சொல்வார்கள்.

அதுபோல் கீரியும் பாம்பும் சண்டையிடும் ஒரு காட்சிதான் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. வனத்துறை அதிகாரி அப்துல் குவாம் வனத்தையொட்டியுள்ள சாலையில் பாம்பும் கீரியும் சண்டையிட்டுக் கொள்ளும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

Screenshot_2020_0820_153430

அந்த வீடியோவில் சாலையில் ஒரு பாம்பும் கீரியும் ஒன்றை ஒன்று அடித்துக் கொள்கின்றன. இதை கடந்து போக முடியாமல் வாகன ஓட்டிகள் வேடிக்கை பார்க்கிறார்கள். முதலில் சண்டையிட்டு கொள்ளும் இரண்டும் ஒவ்வொரு திசையில் திரும்பி செல்கின்றன. எனினும் புதருக்குள் தப்ப முயலும் பாம்பை, கீரிப்பிள்ளை அட்டாக் செய்கிறது. அப்போது எப்படியாவது தப்பிக்க பாம்பு போராடுகிறது.

Screenshot_2020_0820_153446

ஒரு கட்டத்தில் சாக்கடைகள் மூடப்பட்ட பாறாங்கற்களுக்கு இடையில் இருக்கும் ஓட்டைகளில் விழுந்து பாம்பு தப்ப முயல்கிறது. ஆனால் கீரி விடாமல் அப்படியே கடித்து கொன்று அதன் தலையுடன் வாயில் கடித்தவாறே அதன் இருப்பிடத்திற்கு தூக்கிக் கொண்டு ஓடுகிறது. இந்த பயங்கர சண்டையில் இறுதியில் கீரிதான் வெற்றி பெற்றது என்பது அனைவருக்கும் வீடியோவை பார்த்தாலே தெரியும்.

Screenshot_2020_0820_153503

இதுகுறித்து அந்த வனத்துறை அதிகாரி தனது ட்விட்டர் பதிவில் கூறுகையில் இது முற்றிலும் இயற்கையானது. இந்த சண்டையில் எந்த ஒரு உயிரினத்தையும் காப்பாற்ற அங்கிருந்த வாகன ஓட்டிகள் முன்வரவில்லை என்பதை எண்ணி நான் மகிழ்ச்சி அடைகிறேன். உயிர் வாழ்வதற்கு யார் தகுதியானவர் என்று நடந்த இந்த சண்டை இயற்கையானது என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 6 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.