ஸ்ரீ ரங்கம் கோவிலில் கட்டண மாற்றம்!

Published:

Srirangam - 2026

திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் சாமி தரிசனத்திற்கான கட்டணங்களில் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது கோயில் நிர்வாகம்.

முன்பு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் 50 ரூபாய் மற்றும் 250 ரூபாய் என்ற வகையில் தரிசன டிக்கெட்டுகள் இருந்தது. அவை தற்பொழுது ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதற்கு பதிலாக பக்தர்கள் வசதிக்காக கட்டணங்களில் மாற்றம் செய்து 100 ரூபாய் என்ற ஒரே கட்டண தரிசனம் மட்டுமே செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ஸ்ரீரங்கம் கோவிலில் வழக்கம்போல் இலவச தரிசனம் எப்போதும் செயல்படும் எனவும் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Related articles

Recent articles

spot_img