செப்.7ம் தேதி முதல்… மாவட்டங்களுக்கு இடையே பேருந்து சேவை!

சற்றுமுன் சென்னை தமிழகம்
edappadi-in-nellai2
edappadi-in-nellai2
  • முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
  • தற்போது மாவட்டங்களுக்குள் மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் புதிய அறிவிப்பு
  • வரும் 7ம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே அரசு, தனியார் பேருந்து சேவைக்கு அனுமதி
  • வரும் 7ம் தேதி முதல் தமிழகத்திற்குள் ரயில் போக்குவரத்துக்கும் அனுமதி

தமிழகம் முழுவதும் வரும் செப்.7ஆம் தேதி முதல், மாவட்டங்களுக்கு இடையே பேருந்து சேவை தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில்…

தமிழகத்தில் தற்போது, மாவட்டத்திற்குள் மட்டும் பஸ் போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், பொது மக்கள் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு முக்கிய பணி மற்றும் வியாபார நிமித்தமாக சென்று வர அனுமதி கேட்டு பொது மக்களிடம் இருந்து கோரிக்கைகள் வந்தன.

மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, நிலையான வழிகாட்டு நடைமுறைகள் பின்பற்றி, செப்.7 முதல் தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்கிடையேயும் அரசு மற்றும் தனியார் பஸ் சேவை போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

மேலும், அனுமதிக்கப்பட்ட தடங்களில் மாநிலங்களுக்கு இடையேயான ரயில் போக்குவரத்திற்கு ஏற்கெனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி தற்போது செப்.7 முதல் மாநிலத்திற்குள் பயணியர் ரயில் போக்குவரத்து செயல்பட அனுமதிக்கப்படுகிறது… என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.