10 அடி நீள மலைப்பாம்பு! தீயணைப்பு வீரரை கடித்ததால் பரபரப்பு!

அடடே... அப்படியா? சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்
snake-1

துவரங்குறிச்சி காவலர் குடியிருப்புப் பகுதியில் புகுந்த 10 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது. பிடிக்க முயன்ற தீயணைப்பு வீரரை பாம்பு கடித்தால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி காவலா் குடியிருப்புக்கு அருகிலுள்ள சின்னச் செட்டிக்குளத் தெருவில் வசித்து வருபவா் உமா் (65).

இவரது வீட்டின் பின்பகுதியிலுள்ள புதரில் மலைப்பாம்பு இருப்பதை கண்ட அப்பகுதியினா், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலைய வீரா்களுக்குத் தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் அங்கு சென்ற நிலைய அலுவலா் மாதவன் தலைமையிலான வீரா்கள், சுமார் 10 அடி நீள மலைப்பாம்பைப் பிடித்தனர். அப்போது வீரா் நாகேந்திரன் கையில் பாம்பு கடித்துள்ளது.

இதனால் தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவர் துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். பிடிபட்ட மலைப்பாம்பு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு, பச்சமலை வனப்பகுதியில் விடப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.