இந்து சமுதாய விரோதிகளுக்கு மக்கள் ஓட்டு போடக் கூடாது: ஸ்ரீவி., ஜீயர்!

அடடே... அப்படியா? சற்றுமுன் மதுரை லைஃப் ஸ்டைல்
srivillipurthur jeeyar
srivillipurthur jeeyar

திருமாவளவன் போன்று பெண்களை இழிவாக பேசுபவர்கள் தேசவிரோதிகள்; இந்து சமுதாய விரோதிகளுக்கு மக்கள் ஓட்டு போடக்கூடாது என்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் செய்தியாளர்களிடம் பேசினார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் மடத்தின் ஜீயர் சடகோப ராமானுஜர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பாக பெண்களைப் பற்றி இழிவாக மனு சாஸ்திரத்தில் கூறியிருப்பதாக திருமாவளவன் தெரிவித்ததாகவும் அந்த மாதிரி எவ்வித கருத்தும் மனு சாஸ்திரத்தில் இல்லை என்றும் ஆகையால் பெண்களைப் பற்றி தவறாக பேசிய திருமாவளவனுக்கு தனது கண்டனத்தை தெரிவிப்பதாகவும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் தெரிவித்தார்.

உடனடியாக தமிழக அரசு அவரை கைது செய்ய வேண்டும் என்றும் அவ்வாறு செய்யாவிட்டால் தமிழகம் முழுவதிலுமிருந்து துறவிகள் ,பெண்கள் மற்றும் இந்து மக்களை திரட்டி ரோட்டில் இறங்கி போராடப் போவதாகவும் தெரிவித்தார்.

இனி வரும் காலங்களில் நடைபெறும் தேர்தல்களில் திருமாவளவனை எந்தக் கூட்டணியில் சேர்க்கக் கூடாது என்று அரசியல் கட்சிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், இந்து சமுதாய விரோதிகளுக்கு மக்கள் ஓட்டு போடக்கூடாது எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.