அதிர்ச்சி! ஓடையை தூர்வாரும் போது கிடைத்த மீனாட்சி அம்மன் சிலை!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் மதுரை
meenakshi-Statue-1
meenakshi-Statue-1

மதுரை உசிலம்பட்டி அருகே, ஓடையைத் தூர்வாரும் போது நான்கரை கிலோ எடையிலான மீனாட்சி அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

பிரவியம்பட்டி கிராமத்தில் நடைபெற்று வரும் நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ், ஓடையைத் தூர்வாரும் பணி நடைபெற்றது. இந்த தூர்வாரும் பணியின் போது , கம்பியால் மண்ணைத் தோண்டிய போது, டங் டங் என வித்தியாசமான சத்தம் வந்துள்ளது. இதனையடுத்து அங்குள்ள மக்கள் மேற்கொண்டு தோண்டிய போது, வெண்கலத்தினால் ஆன மீனாட்சியம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது.

இந்த சிலையானது ஒரு அடி உயரத்தில், மார்பளவு உடைந்த நிலையில் மீட்கப்பட்டது.

இந்த சிலை மீனாட்சியம்மன் சிலை என அடையாளம் காணப்பட்டது. சிலையை உசிலம்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.