3 நாட்கள் தங்கினா ரூ.18000! ஆஃபர் கொடுத்த அரசு!

உலகம் சற்றுமுன்
malda - 2026

ஐரோப்பாவிலுள்ள மால்டா அரசு சுற்றுலா பயணிகளுக்கு புதிய சூப்பர் ஆஃபரை அறிவித்துள்ளது.

ஐரோப்பாவிலுள்ள மால்டா அரசு சுற்றுலா பயணிகளுக்கு புதிய சூப்பர் ஆஃபரை அறிமுகம் செய்துள்ளது. அதாவது தங்கள் நாட்டிற்கு சுற்றுலா வந்து மூன்று நாட்கள் தங்கியிருக்கும் வெளிநாட்டு பயணிகளுக்கு ரூ.18,000 வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

உலக நாடுகள் முழுவதிலும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. ஆனால் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

அதன் காரணமாக சுற்றுலா பயணிகள் பெரும்பாலான இடங்களுக்கு செல்வதில்லை. இந்நிலையில் ஐரோப்பாவிலுள்ள மால்டா அரசு சுற்றுலா பயணிகளுக்காக புதிய ஆஃபரை அறிவித்துள்ளது.

கொரோனா காரணமாக சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்த நிலையில், சுற்றுலாத்துறையை புத்துயிர் பெறச் செய்யும் நோக்கில் மூன்று நாட்கள் தங்கிச் செல்லும் வெளிநாட்டு பயணிகளுக்கு 18 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு சுற்றுலா பயணிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.