சிறுநீர் கழித்து கலந்த பானிபூரி! வியாபாரி கைது!

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன்
panipori
panipori

சிறுநீரை தண்ணீரில் கலந்த பானிபூரியை விற்ற நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

தற்போதைய வாழ்க்கை முறையில் பலரும் சுத்தமான உணவு, சுகாதாரமான வாழக்கையை வாழ்ந்தாலும் கூட பெயர் தெரியாத பல வியாதிகள் பலரை தாக்குகின்றது.

நாம் உண்ணும் உணவு தான் நமக்கு தேவையான பல சக்திகளை தருகின்றது. எனவே உண்ணும் உணவில் அனைவரும் கவனமாக இருக்கவேண்டியது அவசியம்.

தற்போது அசாம் மாநிலம் கவுகாத்தியில் ஒரு அருவருப்பான சம்பவம் நடந்துள்ளது. அப்பகுதியில், சாலையோரத்தில் உள்ள தள்ளுவண்டி கடையில் பானிப்பூரி விற்கும் நபர் ஒருவர் வேலை செய்து கொண்டே பிளாஸ்டிக் குவளையில் சிறுநீர் கழித்து அதை பானிபூரி தொழிலுக்கு பயன்படுத்தும் நீரில் கலக்கிறார்.

இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் சாலையோர கடைகளில் உணவு உன்பவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.