bhakupali - 2026

பாகுபலி ஹீரோ போல் யானையில் ஏறிய முதியவர்! வைரல்!

சற்றுமுன் அடடே... அப்படியா? பொது தகவல்கள்
bhakupali - 2026

பாகுபலி பிரபாஸ் போல் முதியவர் ஒருவர் யானை மீது ஏறும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இயக்குநர் ராஜமவுலியின் பிரமாண்ட ஹிட் படங்களின் ஒன்றான பாகுபலி இரண்டாம் பாகத்தில் யானையின் தும்பிக்கை மீது நாயகன் பிரபாஸ் ஏறிய காட்சி மிகவும் பிரமாண்டமாக எடுக்கப்பட்டிருக்கும்.

திரைப்படத்தில் அதிகமாக கிராஃபிக்ஸ் பயன்படுத்தப் பட்டிருந்தாலும் அந்த காட்சி ரசிகர்களை மெய் சிலிர்க்க வைத்தது.

இந்நிலையில் பிரபாஸ் போன்று முதியவர் ஒருவர் யானை மீது லாவகமாக ஏறும் வீடியோ வேகமாக பரவி வருகிறது.

எவர் துணையும் இல்லாமல் சர்வ சாதாரணமாக யானையின் தும்பிக்கை வழியாக முதியவரான பாகன் ஒருவர் ஒய்யாரமாக ஏறி அமரும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அது தொடர்பான வீடியோவை ஐபிஎஸ் அதிகாரியான திபான்ஷு கப்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

பாகுபலி 2ல் வரும் பிரபாஸை போல செய்திருக்கிறார் என பிரபாஸ் மற்றும் ராஜமவுலியையும் டேக் செய்திருக்கிறார். ஏராளமானோர் இந்த வீடியோ பார்த்து ரசித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 1 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.