ஆடிப் பிறப்பு; தட்சிணாயன புண்ய காலம் – ஒரு தகவல்!

ஆன்மிகச் செய்திகள் கட்டுரைகள் ஜோதிடம் பொது தகவல்கள்

Bhagwan Surya Dev - 2026

ஆடி மாத பிறப்பு , தக்ஷிணாயன புண்ணிய கால பிறப்பு .. சூரியன் தனது பாதையை தென் புறத்தை நோக்கி செலுத்த ஆரம்பிக்கும் நாள் !

ஆறு மாதங்களுக்கு ஒரு முறை சூரியன் தென் பகுதியுலும் வட பகுதிலும் வானில் காணப்படுவதே இந்த பக்க்ஷ மாறுதல் எனப்படுவது. இன்றையில் இருந்து ஆறுமாதங்கள் “பிதுர் பக்ஷம் ” என அழைக்கப்படுகிற புண்ணிய மாதங்கள்

இன்று சூரியன் தெற்கு பகுதியான “பிதுர் உலகின் ” பக்கமாக பிரயாணத்தை தொடங்குவதால்! தென் புலத்தான் என்று யமனுக்கு பெயர்! அந்த உலகை தனது கதிர்க்காளால் சகதியூட்ட போக்கிற சூரியனை இன்று வழிபாட்டு நமது உடல் செயல் மற்றும் சுகங்களை அளிக்கும் பித்துர்களை வணங்கி போற்றுவோம்!

இந்த ஆறுமாதங்களில் நிறைய இறை வழிப்பாட்டு உற்சவங்கள் நடைபெறும் ஒவ்வொரு மாதங்களிலும் ஒவ்வொரு தெய்வங்களுக்கு ! இந்த தக்ஷிணாயனதில் “சாதுர் மாச்யம் ” எனப்படும் நான்கு மாதங்களில் இந்த இறை வழிபாட்டு திருவிழாக்களும் நிர்ணயக்கப்பட்டு இருக்கின்றன .

இந்த நான்கு மாதங்களில் சன்யாசிகள் “சதுர்மாஸ்ய சங்கல்பம் ” எடுத்துகொண்டு இருப்பார்கள் , சன்யாசிகள் பிதுர் உலகில் , வாரிசு இல்லாத , மிருகங்கள் மற்றும் தாவர பல வித உயிர் இனங்களுக்காக .. இறைவனை வேண்டி தவம் இருக்கும் மாதங்கள் இவை .

நமது பிதுர்களையும் அவர்களுக்கு மேலான தெய்வங்களையும் வணங்கும் நான்கு மாதங்கள் ஆரம்பித்து விட்டன! ஆஷாட (ஆடி ) மாதம் வளர்பிறை ஏகாதசி அன்று தொடங்கி கார்த்திகை மாதம் வளர் பிறை ஏகாதசி அன்று முடியும் வரை இந்த அனைத்து திருவிழாக்களும் அமைக்கப்பட்டு இருக்கின்றன ..

விஜயராகவன் கிருஷ்ணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.