டிக்டாக் விளையாட்டு: துப்பாக்கி தவறுதலாக சுட்டு மாணவர் உயிரிழப்பு

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

tik tok douyin taking the world bytedance feature image 1 - 2026

துப்பாக்கியை வைத்து டிக்-டாக் வீடியோ… தவறுதலாக நண்பன் சுட்டதில் மாணவர் உயிரிழப்பு..!

தில்லியின் ஜப்ராபாத் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவரான சல்மான் (19), தனது நண்பர்களுடன் நேற்று முன்தினம் இரவில் காரில் இந்தியா கேட் பகுதிக்குச் சென்றுள்ளார்.

அங்கு, டிக்-டாக் மூலம் துப்பாக்கியை வைத்து வீடியோ பதிவு செய்ய முயன்றுள்ளனர்.

IMG 20190415 WA0059 - 2026

காரின் டிரைவர் சீட்டில் அமர்ந்தவாறு சல்மானின் கன்னத்தில் நாட்டு துப்பாக்கியை மற்றொரு நண்பரான சொகைல் வைத்து வீடியோவுக்கு போஸ் கொடுத்துள்ளார்.

அப்போது, எதிர்பாராத விதமாக துப்பாக்கி வெடித்தது. இதில், கழுத்துப் பகுதியில் குண்டு பாய்ந்ததால் சல்மான் அங்கேயே ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.

இதனால், அதிர்ச்சியடைந்த நண்பர்கள் சல்மானை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால், அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து, அங்கிருந்து நண்பர்கள் தப்பி ஓடியுள்ளனர்.

இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரை அடுத்து, தப்பி ஓடிய மூவரும் கைது செய்யப்பட்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.