இது பெரியார் மண்ணும் இல்ல ஒன்னும் இல்ல… சீமான் ஆவேசம்!

Published:

seeman pressmeet - 2026

பல ஆயிரம் ஆண்டுகள் தொன்மையான தமிழ் மண்ணை, இது பெரியார் மண், அண்ணாவின் பூமி என்று சொல்லி, ஐம்பது ஆண்டுகளுக்குள் தமிழகத்தைச் சுருக்குவதை எப்படி ஏற்றுக்கொள்வது.

இந்த மண்ணில் சித்தர்கள் வாழ்ந்திருக்கிறார்கள், யோகிகள் இருந்திருக்கிறார்கள்.

சேர சோழ பாண்டியர்கள் ஆண்டிருக்கிறார்கள். தீரன் சின்னமலை நிலம் இது. மருதுபாண்டியர் வீரம் தெரிந்த மண் இது. இப்படி எத்தனையோ பெருமை இருக்கும்போது பெரியார் மண் என்று அடக்குவது தவறு.

பெண் விடுதலைக்குப் பெரியார் மட்டும் தான் போராடினாரா. சாதி ஒழிப்புக்கு எதிராகப் பலரும் போராடி இருக்கும்போது ஒருவரை மட்டும் அடையாளப்படுத்துவதும் தவறு தான்”. என்று பேசி புதுவித சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.

Related articles

Recent articles

spot_img