29 C
Chennai
புதன்கிழமை, டிசம்பர் 2, 2020

பஞ்சாங்கம் டிச.2 புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் டிச.2ஸ்ரீராமஜயம் | ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் |பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~17 (02.12.2020)*புதன்கிழமை **வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது *~ சரத் ருதௌ....
More

  மிரட்டும் புரெவி புயல்: தென்மாவட்டங்களில் உஷார் நிலை!

  வங்கக்கடலில் உருவாகி உள்ள புரெவி புயல், பாம்பனிலிருந்து 530 கி.மீ., தொலைவில் நிலை கொண்டுள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

  மதுரை ‘தில்லுமுல்லு’ பெட்ரோல் பங்க் இயங்க… 15 நாள் தடை!

  பெட்ரோல் பங்கில் தில்லு-முல்லு… 15 நாட்கள் பெட்ரோல் நிலையம் நடத்த தடை விதித்தார் ஐ.ஓ.சி. அதிகாரி.

  இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

  பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப் படுகிறது.

  சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 10 புதிய நீதிபதிகள்!

  இவர்கள் 10 பேரையும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்திருந்த நிலையில்,

  தனுஷின் 43வது படம்.. மாஸ் அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்..

  நடிகர் தனுஷ் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் படத்தை முடித்துவிட்டார். அதேபோல், மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘கர்ணன்’ படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது. மேலும், பாலிவுட் படமான ‘அத்ரங்கி ரே’ படத்திலும்...

  வாணிபோஜனுடன் லிப்லாக்.. ஜெய் நடிப்பில் ‘டிரிபிள்ஸ்’ சீரியஸ் டிரெய்லர் வீடியோ

  நடிகர் ஜெய் நடிக்கும் பல திரைப்படங்களில் வெற்றியை பெறுவதில்லை. ஆனாலும் ,அவர் தொடர்ந்து நடித்து வருகிறார். எப்படியாவது ஹிட் படங்களை கொடுக்க வேண்டும் என மெனக்கெட்டு வருகிறார். இந்நிலையில், டிரிபிள்ஸ் எனும் தமிழ் வெப்...

  சினிமா வரலாற்றில் முதல்முறை – மாஸ்டர் நிகழ்த்தப்போகும் சாதனை

  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படம் தியேட்டர் மற்றும் ஓடிடியில் வெளியாகிறது என மாறி மாறி செய்திகள் வந்த நிலையில், இப்படத்தை தியேட்டரில் மட்டுமே வெளியிடுவோம் என தயாரிப்பு...

  ஒருவழியாக உறுதியான வெற்றிமாறன் படம் – அந்த நடிகரைத்தான் இயக்குகிறாராம்!..

  தமிழ் சினிமாவில் பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை, விசாரணை, அசுரன் என பெயர் சொல்லும் படங்களை இயக்கியவர் வெற்றிமாறன். அசுரனுக்கு பின் இவர் இயக்கும் நடிகர்கள் பட்டியலில் சூரி, சூர்யா, தனுஷ் ஆகியோரின்...

  கலவரங்கள் உருவாக்கப் படுவதை தடுக்க… சிலை பாதுகாப்பு பராமரிப்பு பூங்கா உருவாக்க வேண்டும்!

  தமிழகத்தில் தேவையற்ற கலவரங்களை தடுக்க "சிலை பாதுகாப்பு பராமரிப்பு பூங்கா" உருவாக்கிட வேண்டும் என்று இந்து தமிழர் கட்சி

  evr statue
  evr statue

  தமிழகத்தில் தேவையற்ற கலவரங்களை தடுக்க “சிலை பாதுகாப்பு பராமரிப்பு பூங்கா” உருவாக்கிட வேண்டும் என்று இந்து தமிழர் கட்சி கோரிக்கை விடுத்திருக்கிறது.

  இது குறித்து அந்தக் கட்சியின் நிறுவனத் தலைவர் ராம.ரவிக்குமார் தெரிவித்திருப்பதாவது…

  நாட்டுக்காக பாடுபட்ட தேசிய தலைவர்களுக்கு சிலை வைத்து வணங்கி வந்த நாம் திராவிட ஆட்சியாளர்கள் வந்தபிறகு “கடவுள் மறுப்பாளர்களை” கூட கடவுளாக நினைத்து, கடவுள் மறுப்பு கட்சிக்காரர்களைவணங்கச் செய்த “பகுத்தறிவு பரிணாம வளர்ச்சி” தமிழ்நாட்டில் நடந்தது.

  *ஈவேரா கடலூரில் பொதுக்கூட்டத்தில் பேசிக் கொண்டு இருந்தாராம் ; பேசும்போது செருப்பு மேடை மீது வந்து விழுந்ததாம். அதன் நினைவாக அந்த இடத்தில் ஈவேரா.,வுக்கு சிலை வைத்திருக்கிறார்கள்.

  *ஈ வெ ரா வும் அண்ணாதுரையும் திருப்பூர் ரயில் நிலையத்தில் சந்தித்துக் கொண்டார்கள் என்று திருப்பூர் ரயில் நிலையம் முன்பாக சிலை வைத்திருக்கிறார்கள்.

  *மறைந்த கருணாநிதி அவர்கள் உயிருடன் இருக்கும் போதே சென்னை அண்ணா சாலையில் தனக்குத்
  தானே சிலை வைத்து அது பின்னர் உடைக்கப்பட்ட வரலாறு தமிழ்நாடு மறந்துவிடவில்லை.

  *அண்ணல் அம்பேத்கர், பசும்பொன் முத்துராமலிங்க தேவர், வ உ சிதம்பரனார் வீரன் அழகுமுத்துக்கோன்……. உள்ளிட்ட பல தலைவர்கள் சிலைகள் மீது செருப்பு மாலை போடுவது, சாணி கரைத்து ஊற்றுவது …. என அவமதிக்கப் பட்டு ஒரு சில இடங்களில் சிலைகள் உடைக்கப்பட்டு அதன் மூலமாக தமிழ்நாட்டில் சாதி கலவரங்கள் நடந்தது

  அந்தக் கலவரங்களில் ஒவ்வொரு சமுதாய மக்களும் கொலை செய்யப்பட்டு பெரும் பாதிப்புக்குள்ளான சம்பவங்கள் பல கூறலாம்.

  இந்த சாதி கலவரங்கள் தான் சாதித் தலைவர்களை ஓட்டு சீட்டு அரசியலுக்கு மாற்றி,திராவிட கட்சிகளோடு கூட்டணி வைத்து சட்டமன்றம், பாராளுமன்றம் என உள்ளேசெல்ல காரணமாக அமைந்தது.

  *ஓட்டு அரசியலுக்கு அரசு பேருந்துகளுக்கு சாதித் தலைவர்கள் பெயர் வைக்கச் சொல்லி
  பெயர் வைத்தது ; அது பின்னர் பெரும்பெரும் கலவரங்களுக்கு காரணமாக அமைந்த வரலாறும் தமிழ்நாடு மறந்துவிடவில்லை.

  *நாட்டுக்கு பாடுபட்ட நல்ல தலைவர்களை; தேசிய தலைவர்களை குறுகிய வட்டத்தில், சாதித் தலைவர்களாக மாற்றிய தமிழக “மக்களின் எண்ண திரிபு” காரணமாக இதுபோன்ற சம்பவங்கள் நடக்க காரணமாக அமைந்தது.

  சுதந்திரத்திற்கு பாடுபட்ட தலைவர்கள்; கட்சிக் கொள்கைக்கு பாடுபட்ட தலைவர்கள்; உயிருடன் இருக்கும் போதும் சிறைச்சாலைகளில் இருந்தார்கள்; இறந்து சிலையாக நிற்கும் போதும் “சிறைச்சாலை” போல கம்பி வேலி போட்டு, சிறைக்கைதி போல அடைத்து நிற்பதை பார்க்கும் காலக் கொடுமை எல்லாம் தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது

  ஒவ்வொரு தலைவர்களுடைய பிறந்தநாள், நினைவு தினங்களில் அனைவரும் சென்று மாலை அணிவிப்பது; மரியாதை செலுத்துவது; என மரபு அனைவரிடமும் இருக்கிறது.

  அது முடிந்துசில தினங்களில் அணிவித்த மாலை காய்ந்த சருகாக தலைவர்களின் சிலைகள் கழுத்தில் இருக்கும் போது அதை எடுத்துப் போடுவதற்கு கூட ஒருவர் வருவதில்லை.என்பது மன வேதனையான விஷயம்.

  திறந்தவெளியில்வைக்கப்படக் கூடிய சிலைகளால் பறவைகள் காக்கைகள் போன்றவை தங்களுடைய எச்சங்களை வெளியேற்றும் இடமாக தலைவர்கள் சிலையை மாற்றி விடுகிறது.

  காந்தி சிலைகளில் காக்கைகள் உட்காருவதில்லை, காரணம் கையில் “குச்சி” வைத்திருக்கிறாராம்.

  சென்னை மெரினா கடற்கரை நடைபாதைகளில் தலைவர்கள் சிலைகள் எப்படி எல்லாம் இருக்கிறது என்பதை பார்ப்பவர்களுக்குத் தெரியும்.

  சமீபகாலமாக சிலைகள் உடைக்கப்படுவது,செருப்பு மாலை அணிவிப்பது,வண்ணச் சாயம் – பெயிண்ட் ஊற்றுவது ….. என தொடர் சம்பவங்கள் நடக்கிறது.

  அதன் பின்னர் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து சிலைகளுக்கும் காவல் பாதுகாப்பு போடப்படுகிறது .பின்னர் அது தளர்த்த படுகிறது. இது வீணான பதட்டம். காவல்துறைக்கு நேரம் விரயம்.

  இது போன்ற சூழலைதடுக்க தமிழக அரசு “சமத்துவ புரம்” உருவாக்கியது போல, “தொழில் பூங்கா” உருவாக்குவது போல தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து சிலைகளையும்கணக்கெடுத்து, அதில் நாட்டுக்காக பாடுபட்ட தலைவர்கள் எத்தனை? அரசியல் கட்சி ரீதியாக இருக்கக்கூடியதலைவர்கள் எத்தனை? என கணக்கிட வேண்டும்.

  பின்னர் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ளஅனைத்து சிலைகளையும் அகற்றி ஒவ்வொரு தாலுகா மையங்களிலும் ஒரு” சிலை பாதுகாப்பு பராமரிப்பு பூங்கா” உருவாக்க வேண்டும்.

  அதில் ஒவ்வொரு தலைவர்களில் வாழ்க்கைக் குறிப்பு கல்வெட்டுகளில் அல்லது போர்டுகளில்பதிக்கப்பட வேண்டும்.

  *வைக்கப்பட்ட சிலைகளை தூய்மையாக வைக்க பராமரிக்க ஊழியர்கள் நியமிக்க வேண்டும்.

  தலைவர்களின் சிலைகளை பராமரிக்க தேவையான செலவினங்களை அந்தந்த கட்சி அல்லது சமுதாய அமைப்பு தலைவர்களிடம்விருப்பத்தின்அடிப்படையில் பெற வேண்டும்.

  *தலைவர்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்து; மரியாதை செலுத்த விரும்பும் நபர்கள், அமைப்புகள், கட்சிகள்,…. என யாராக இருந்தாலும் முறையாக “சிலை பாதுகாப்பு பராமரிப்பு பூங்கா”வில் அனுமதி வாங்கி; காவல் அனுமதியுடன் மரியாதை செலுத்தினால் தேவையற்ற சிலை உடைப்பு, அவமதிப்பு, மக்கள் பதட்டம், போக்குவரத்து பாதிப்பு சாதிக் கலவரங்கள் மதக்கலவரங்கள் போன்றவை தடுக்கப்பட்டு தமிழகம் அமைதிப் பூங்காவாக என்றும் திகழும்.

  இந்த “சிலை பாதுகாப்பு பராமரிப்பு பூங்கா” என்கின்ற சிந்தனைக்கு தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து கட்சி தலைவர்களும்; சமுதாய தலைவர்களும் ,மதத் தலைவர்களும் ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று இந்து தமிழர்கட்சியின் சார்பில் வேண்டுகோள் முன் வைக்கிறோம். … என்று தெரிவித்துள்ளார்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  மிரட்டும் புரெவி புயல்: தென்மாவட்டங்களில் உஷார் நிலை!

  வங்கக்கடலில் உருவாகி உள்ள புரெவி புயல், பாம்பனிலிருந்து 530 கி.மீ., தொலைவில் நிலை கொண்டுள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

  மதுரை ‘தில்லுமுல்லு’ பெட்ரோல் பங்க் இயங்க… 15 நாள் தடை!

  பெட்ரோல் பங்கில் தில்லு-முல்லு… 15 நாட்கள் பெட்ரோல் நிலையம் நடத்த தடை விதித்தார் ஐ.ஓ.சி. அதிகாரி.

  தனுஷின் 43வது படம்.. மாஸ் அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்..

  நடிகர் தனுஷ் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் படத்தை முடித்துவிட்டார். அதேபோல், மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘கர்ணன்’ படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது. மேலும், பாலிவுட் படமான ‘அத்ரங்கி ரே’ படத்திலும்...

  சுபாஷிதம்: அடிப்படை வசதிகள்!

  கிராமங்களில் கட்டாயமாக தேவைப்படும் வசதிகள் இவை. அப்போதுதான் நகரங்களுக்கு புலம் பெயர்வது குறையும். கிராமங்கள்
  Dhinasari Jothidam adDhinasari Jothidam ad

  Follow Dhinasari on Social Media

  18,041FansLike
  78FollowersFollow
  73FollowersFollow
  971FollowersFollow
  17,300SubscribersSubscribe

  மிரட்டும் புரெவி புயல்: தென்மாவட்டங்களில் உஷார் நிலை!

  வங்கக்கடலில் உருவாகி உள்ள புரெவி புயல், பாம்பனிலிருந்து 530 கி.மீ., தொலைவில் நிலை கொண்டுள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

  மதுரை ‘தில்லுமுல்லு’ பெட்ரோல் பங்க் இயங்க… 15 நாள் தடை!

  பெட்ரோல் பங்கில் தில்லு-முல்லு… 15 நாட்கள் பெட்ரோல் நிலையம் நடத்த தடை விதித்தார் ஐ.ஓ.சி. அதிகாரி.

  சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 10 புதிய நீதிபதிகள்!

  இவர்கள் 10 பேரையும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்திருந்த நிலையில்,

  சுபாஷிதம்: அடிப்படை வசதிகள்!

  கிராமங்களில் கட்டாயமாக தேவைப்படும் வசதிகள் இவை. அப்போதுதான் நகரங்களுக்கு புலம் பெயர்வது குறையும். கிராமங்கள்

  ராஜபாளையத்தில் 108 சங்காபிஷேக பூஜை!

  இராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

  ஜிஎஸ்டி வருவாய் கூடியிருக்கு… நல்ல விசயம்தானே! அப்படின்னா…?!

  சரியான பாதையில் - தண்டவாளத்தில்- இருந்து பொருளாதாரத்தை வீழாமல் மோடி அவர்களின் அரசு செய்த சிறப்பான பொருளாதார செயல் பாடுகளே !!!

  ஒரே தேசம், ஒரே தேர்தல்… ஏன்? எதற்கு?

  இந்த ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்தை முன்னெடுக்க ஊடகங்களின் பங்கு மிக அவசியம் மட்டுமல்ல அவசரமும் கூட

  ஒரே தேசம்; ஒரே தேர்தல்… மாற்றத்துக்கான தேவை!

  அதே போன்ற ஒரு திட்டத்தை சட்டசபைகளுக்கும் கொண்டு வருவது குழப்பங்களை தவிர்ப்பதோடு, மத்திய மாநில அரசுகளின்
  Translate »