- முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
35ம் நாள் : ஐபிஎல் 2024 – 25.04.2024
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
பெங்களூரு அணி (206/7, விராட் கோலி 51, ரஜத் படிதர் 50, காமரூன் கிரீன் 37*, டியு பிளேசிஸ் 25, ஜெயதேவ் உனக்தத் 3/30, நடராஜன் 2/39) ஹைதராபாத் அணியை (171/8, ஷபாஸ் அகமது 40*, அபிஷேக் ஷர்மா 31, பேட் கம்மின்ஸ் 31, கிரீன் 2/12, கரண் ஷர்மா 2/29, ஸ்வப்னில் சிங் 2/40) 35 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இன்று ஹைதராபாத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெற்றது. பூவாதலையா வென்ற பெங்களூரு அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. அந்த அணியின் தொடக்க வீரர்களான விராட் கோலி (43 பந்துகளில் 51 ரன், 4 ஃபோர், 1 சிக்சர்) மற்றும் டியு பிளேசிஸ் (12 பந்துகளில் 25 ரன்) இருவரும் சிறப்பான தொடக்கம் தந்தனர்.
டியு பிளேசிஸ் 3.5ஆவது ஓவரிலேயே ஆட்டமிழந்தார். அவருக்குப் பின்னர் ஆடவந்த வில் ஜேக்ஸ் (9 பந்துகளில் 6 ரன்) சிறப்பாக ஆடவில்லை. ஆயினும் ரஜத் படிதர் (20 பந்துகளில் 50 ரன், 2 ஃபோர், 5 சிக்சர்) சிறப்பாக ஆடி 12.4ஆவது ஓவரில் அவுட்டானார். அவருடன் காமரூன் கிரீன் (20 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 37 ரன், 5 ஃபோர்) இணைந்து விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். மஹிபால் லோமர் (4 பந்துகளில் 7 ரன்), தினேஷ் கார்த்திக் (6 பந்துகளில் 11 ரன்), ஸ்வப்னில் சிங் (6 பந்துகளில் 12 ரன்) ஆகியோர் இன்று சிறப்பாக விலையாடவில்லை. இதனால் 20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 7 விக்கட் இழப்பிற்கு 206 ரன் எடுத்திருந்தது.
207 ரன் என்ற அடையக்கூடிய இலக்கை எட்ட இரண்டாவதாக ஆட வந்த ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களில் ஒருவரான ட்ராவிஸ் ஹெட் (1 ரன்) முதல் ஓவரின் கடைசிப் பந்தில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான அபிஷேக் ஷர்மா 3.4ஆவது ஓவர் வரை ஆடி 31 ரன் சேர்த்தார்.
ஆனால் அடுத்தடுத்து வந்த பேட்டர்களான ஐடன் மர்க்ரம் (8 பந்துகளில் 7 ரன்), நிதீஷ் குமார் ரெட்டி (13 பந்துகளில் 13 ரன்), கிளாசன் (3 பந்துகளில் 7 ரன்) ஆகியோர் இன்று சோபிக்கவில்லை. அதன் பின்னர் ஆடவந்த ஷாபாஸ் அகமது (37 பந்துகளில் 40 ரன்), அப்துல் சமது (6 பந்துகளில் 10 ரன்), பேட் கம்மின்ஸ் (15 பந்துகளில் 31 ரன், 1 ஃபோர், 3 சிக்சர்), புவனேஷ்வர் குமார் (13 பந்துகளில் 13 ரன்) ஜெய்தேவ் உனக்தத் (10 பந்துகளில் 8 ரன்) ஆகியோரால் 20 ஓவர்களில் குறிப்பிட்ட இலக்கை அடையமுடியவில்லை.
இதனால் ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கட் இழப்பிற்கு 171 ரன் மட்டுமே எடுத்து 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
பெங்களூரு அணியின் ரஜத் படிதர் தனதுசிறப்பான பேட்டிங்கிற்காக ஆட்டநாயகன் விருது பெற்றார்.
நாளை கொல்கொத்தாவில் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும்.
25.04.2024 அன்று நிலவரப்படி புள்ளிப்பட்டியல்
அணி | ஆ | வெ | தோ | புள்ளி | நெட் ரன் ரேட் |
ராஜஸ்தான் | 8 | 7 | 1 | 14 | 0.698 |
கொல்கொத்தா | 7 | 5 | 2 | 10 | 1.206 |
ஹைதராபாத் | 8 | 5 | 3 | 10 | 0.577 |
லக்னோ | 8 | 5 | 3 | 10 | 0.148 |
சென்னை | 8 | 4 | 4 | 8 | 0.415 |
டெல்லி | 9 | 4 | 5 | 8 | -0.386 |
குஜராத் | 9 | 4 | 5 | 8 | -0.974 |
மும்பை | 8 | 3 | 4 | 6 | -0.227 |
பஞ்சாப் | 8 | 2 | 6 | 4 | -0.292 |
பெங்களூரு | 9 | 2 | 7 | 4 | -0.721 |