36ம் நாள்: ஐபிஎல் 2024 – 26.04.2024
- முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்
கொல்கொத்தா அணியை (261/6, பில் சால்ட் 75, சுனில் நரேன் 71, வெங்கடேஷ் ஐயர் 39, ஆண்ட்ரு ரசல் 24, ஷ்ரேயாஸ் ஐயர் 28, அர்ஷதீப் சிங் 2/45) பஞ்சாப் அணி (262/2, ஜானி பெயிர்ஸ்டோ 108*, பிரப்சிம்ரன் சிங் 54, ரிலீ ரோஸ்கோ 26, ஷஷாங்க் சிங் 68*) 8 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
இன்று கொல்கொத்தாவில் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெற்றது. பூவாதலையா வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. எனவே கொல்கொத்தா அணி மட்டையாட வந்தது.
அந்த அணியின் தொடக்க வீரர்களான பில் சால்ட் (37 பந்துகளில் 75 ரன், 6 ஃபோர், 6 சிக்சர்) மற்றும் சுனில் நரேன் (32 பந்துகளில் 71 ரன், 9 ஃபோர், 4 சிக்சர்) இருவரும் சிறப்பான தொடக்கம் தந்தனர். சுனில் நரேன் 10.2ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். பில் சால்ட் 12.3 ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். அச்சமயத்தில் அணியின் ஸ்கோர் 163/2. அவருக்குப் பின்னர் ஆடவந்த வெங்கடேஷ் ஐயர் (23 பந்துகளில் 39 ரன்), ஆண்ட்ரு ரசல் (12 பந்துகளில் 24 ரன், 2 ஃபோர், 2 சிக்சர்), ஷ்ரேயாஸ் ஐயர் (10 பந்துகளில் 28 ரன், 1 ஃபோர், 3 சிக்சர்) சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
ஷ்ரேயாசுக்குப் பின்னர் ஆடவந்த ரிங்கு சிங் 4 பந்துகளில் 5 ரன் அடித்தார். அதன் பின்னர் ரமன்தீப் சிங் 3 பந்துகளில் 6 ரன் அடித்தார். இதனால் 20 ஓவர் முடிவில் கொல்கொத்தா அணி 6 விக்கட் இழப்பிற்கு 261 ரன் எடுத்திருந்தது. கொல்கொத்தா மைதானத்தில் அடிக்கப்பட்ட அதிகபட்ச் ஐ.பி. எல் ஸ்கோர் இதுவாகும்.
262 ரன் என்ற அடையக்கூடிய இலக்கை எட்ட இரண்டாவதாக ஆட வந்த பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களில் ஒருவரான பிரப்சிம்ரன் சிங் (20 பந்துகளில் 54 ரன், 4 ஃபோர், 5 சிக்சர்) ஆறாவது ஓவரின் கடைசிப் பந்தில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான ஜானி பெயர்ஸ்டோ (48 பந்துகளில் 108 ரன், 8 ஃபோர், 9 சிக்சர்)இறுதி வரை ஆடி வெற்றிக்கு வழிவகுத்தார்.
அவருடன் ரிலீ ரோஸ்கோ (16 பந்துகளில் 26 ரன், 1 ஃபோர், 2 சிக்சர்) மற்றும் ஷஷாங்க் சிங் (28 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 68 ரன், 2 ஃபோர், 8 சிக்சர்) இணைந்து ஆடி 18.4 ஓவரில் வேற்றிக்குத் தேவையான 262 ரன்னை எடுத்தனர்.
இதனால் பஞ்சாப் அணி ஒரு அதிக பட்ச ஸ்கோரை சேஸ் செயது 8 விக்கட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
பஞ்சாப் அணியின் ஜானி பெயர்ஸ்டோ தனதுசிறப்பான பேட்டிங்கிற்காக ஆட்டநாயகன் விருது பெற்றார்.
நாளை இரண்டு ஆட்டங்கள் நடைபெற உள்ளன. முதல் ஆட்டம் டெல்லியில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே பகலிரவு ஆட்டமாக நடைபெறும்.
இரண்டாவது ஆட்டம் லக்னோவில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் இடையே நடைபெறும்.
26.04.2024 அன்று நிலவரப்படி புள்ளிப்பட்டியல்
அணி | ஆ | வெ | தோ | புள்ளி | நெட் ரன் ரேட் |
ராஜஸ்தான் | 8 | 7 | 1 | 14 | 0.698 |
கொல்கொத்தா | 8 | 5 | 3 | 10 | 0.972 |
ஹைதராபாத் | 8 | 5 | 3 | 10 | 0.577 |
லக்னோ | 8 | 5 | 3 | 10 | 0.148 |
சென்னை | 8 | 4 | 4 | 8 | 0.415 |
டெல்லி | 9 | 4 | 5 | 8 | -0.386 |
குஜராத் | 9 | 4 | 5 | 8 | -0.974 |
பஞ்சாப் | 9 | 3 | 6 | 6 | -0.187 |
மும்பை | 8 | 3 | 4 | 6 | -0.227 |
பெங்களூரு | 9 | 2 | 7 | 4 | -0.721 |