
-> லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்
இப்போது கிறித்துவ தீவிர மதமாற்ற சர்ச்சையில் வசமாகச் சிக்கியிருக்கும் ‘திருக்காட்டுப்பள்ளி’, தஞ்சை மாவட்டம் திருவெண்காட்டுக்கு அருகே உள்ள சிற்றூர்.
என் சிறு வயது ரயில் பயணங்களில் மெய்ன் லைனில் அங்கே க்ராசிங்கில் மணிக்கணக்கில் ரயில் இருட்டில் நிற்கும் காட்டுப் பிரதேசம். “போட் மெய்ல் க்ராஸ் பண்றான், இப்ப எடுத்துருவான்” என்று பெரிசுகள் ஏதோ சொல்வார்கள்.
எட்டிப் பார்த்தால் எப்போதும் கும்மிருட்டாக இருக்கும். ஒரு டீ, வடை விற்கக்கூட நாதி இருக்காது. ஸ்டேஷனில் ஈ, காக்கா இருக்காது. தூரத்தில் கையில் சிவப்பு விளக்குடன் ஸ்டேஷன் மாஸ்டர் தனியே நடந்து கொண்டிருப்பார்.
“காவிரியாற்றின் தென்கரையில் இவ்வூர் அமைந்துள்ளது. காவிரியாறு, காவிரி – குடமுருட்டி என்று இரண்டு ஆறுகளாகப் பிரிவது இவ்வூரில்தான்.
பன்னீர் மரத்தை ஸ்தல விருட்சமாகக் கொண்ட ஆரண்யேஸ்வரர் கோவிலும், அக்னி தீர்த்தமும் இங்கே பிரசித்தம்.
கோட்டை ஆஞ்சநேயர் ஆலயமும், கோட்டை காளி ஆலயமும் பழமையான பிற முக்கியமான கோவில்களாகும்.” என்கிறது விக்கிபீடியா.
இது ஒரு பாடல் பெற்ற ஸ்தலம் என்பதில் சந்தேகம் இல்லை.
வாருமன் னும்முலை மங்கையோர் பங்கினன்
ஊருமன் னும்பலி யுண்பதும் வெண்டலை
காருமன் னும்பொழில் சூழ்ந்தகாட் டுப்பள்ளி
நீருமன் னுஞ்சடை நிமலர்தந் நீர்மையே.
(திருஞானசம்பந்தர்)
திருநாவுக்கரசர் பாடிய பதிகம் கீழே:
மாட்டுப் பள்ளி மகிழ்ந்துறை வீர்க்கெலாங்
கேட்டுப் பள்ளிகண் டீர்கெடு வீரிது
ஓட்டுப் பள்ளிவிட் டோ ட லுறாமுனங்
காட்டுப் பள்ளியு ளான்கழல் சேர்மினே
கலியுக ஆரம்பத்தில் அதர்மத்தை எதிர்த்துப் போராடிய குழந்தை லாவண்யாவால் இப்போது இன்னும் பிரசித்தம்!
#JusticeForLavanya
எங்கும் நிறை எட்டப்ப வாரிசுகள்!
இஸ்ரேல் ஆகட்டும், பாலஸ்தீன் ஆகட்டும், இந்தியா ஆகட்டும், வெள்ளைக்காரன் எந்த ஒரு காலனியை எப்போது காலி செய்ய நேர்ஃதாலும், புதிதாகவே ஏற்படுத்தினாலும் கூட, அதில் விஷ விதைகளை விதைத்து விட்டே செல்வான். மநோரீதியான கொடிய டைம் பாம்களை மக்கள் மனதில் விதைக்காமல் அவன் விலகியதாக சரித்திரம், பூகோளம் எதுவும் இல்லை.
உலக சரித்திரத்தில் கொஞ்சம் பின்னோக்கிப் பார்த்தோமேயானால், கொள்ளைக்கார வெள்ளையர்கள் -டட்ச், ப்ரிட்டிஷ், ஜெர்மானிய, ஃப்ரெஞ்ச்- பங்காளிகளின் பேராசையும், நிறவெறியும், மதவெறியுமே காலனிகளின் ஆரம்பத்திற்குக் காரணம்.
வெள்ளைத்தோல் தவிர மற்ற எல்லாமும் மட்டம், மற்ற முதிர்ந்த உலக கலாச்சாரங்கள் ஒன்றுக்கும் லாயக்கில்லாதவை, ஆனாலும் அவற்றை நிர்மூலம் செய்யவேண்டும், தொடர்ந்து சுரண்டிக் கொள்ளை அடிக்கவேண்டும் என்பதே அவர்களின் அடிப்படை எண்ணம். அதை அந்த கசின்கள் போட்டி போட்டுக்கொண்டு செய்து முடித்தார்கள்.
“யாவரும் ஓர் குலம்”, ” வஸுதைவ குடும்பகம்” என்றெல்லாம் அவர்களை நாமும் படு முட்டாள்தனமாக, வெள்ளந்தியாக வரவேற்றதும், அவர்கள் நம் மண்ணில் நன்றாகக் காலூன்றி நம்மையே நிர்மூலம் செய்ததும் நம் சோக வரலாறு.
அவர்கள் விட்டுச்சென்ற திருப்பணியை தீராவிட அரசியல் ஒரு மாபெரும் பிசினசாகவே வளர்த்தெடுத்திருப்பதும், வெள்ளையர்களின் எச்சங்கள் அவர்களோடு கை கோர்த்து நிற்பதும் நம் அவல அரசியலின், முட்டாள்தனமாக செக்யூலரிசக் கொள்கைகளின் காரணமாகவே.
சில வருஷங்கள் முன்பு நான் தென்னாப்பிரிக்காவின் பல தேசங்களுக்கும் சென்றேன். அங்கே எங்களுக்கு வாய்த்த ஒரு டூர் ‘கைட்’, அவனும் வெள்ளைக்கார டட்ச் வழி வந்தவன் என்றாலும், தென்னாப்பிரிக்காவில் வெள்ளைக்காரர்கள் பல ஆண்டுகளாகச் செய்த அட்டூழியங்களைப் பட்டியலிட்டுச் சொல்லிச் சொல்லி ஒவ்வொரு ஊரிலும் கண்ணீர் வடித்தான்.
எப்படியெல்லாம் கிறித்துவம் அங்கே வலுக்கட்டாயமாகப் புகுத்தப்பட்டது, கறுப்பினக் குடி மக்களை நாங்கள் எப்படியெல்லாம் அடிமைப் படுத்தினோம், சுட்டுப் பொசுக்கினோம், அவர்களுடைய பெண்களைச் சூறையாடினோம் என்பதையெல்லாம் அவன் புலம்பிக்கொண்டே வந்தான்.
அவன் ஒரு கைட் மட்டுமில்லை, வரலாற்று ஆசிரியன், எழுத்தாளனும் கூட. முக்கியமாக மனச்சாட்சிக்குக் கட்டுப்பட்டவன்.
தற்போது தென்னாப்பிரிக்காவில் சுதந்திரம் வந்து விட்டாலும் எப்படி அங்கேயும் இதே மாதிரி தீராவிடக் கருப்பர்கள் கிறித்துவ எச்சங்களுடன் தற்காலத்தில் ஊழலில் திளைக்கிறார்கள், தங்கள் நாட்டையே சூறையாடுகிறார்கள் என்பதையும் அவன் எங்களுக்கு விளக்கத் தவறவில்லை.
இந்த அவலத்தை நான் ஆஸ்திரேலியாவிலும் கண்டேன். உலகப் பிரசித்தி பெற்ற பிரம்மாண்டமான Ayer’s Rock பகுதியில் பழங்குடி ஆதிவாசிக் கருப்பர்கள் கூட்டம் கூட்டமாக- பலரும் மனநிலை பிறழ்ந்தவர்கள், போதைப் பொருட்களுக்கும் சாராயத்துக்கும் அடிமைகள்- தனித்தனி இடங்களில் இருந்ததும், அங்கே குழுமியிருந்த சோகமும் இன்றும் என் நெஞ்சைப் பிசைகிறது. அது பற்றித் தனியே எழுதுகிறேன்.
எதற்காக அதை இங்கே எழுதினேன் என்றால், நம் தீராவிடப் பொறுக்கிகளின் பேயாட்டம், கிறித்துவ எச்சங்களின் கைகோர்த்த மொள்ளமாரித்தனம், ஒரு விதத்தில் உலகளாவிய பெரு வியாதியே. கொரானாவை விடவும் மோசமானதொரு கொடிய நோயே என்பதை விளக்கத்தான்.
“தர்மம் ஒரு நாள் வெல்லும்” என்று நாம் அத்தை பாட்டிக் கதைகள்பேசிக் கொண்டிருக்கையில் நம் இந்திய பாரம்பரியமும், தமிழ்க் கோவில்களும், கலாச்சாரமும் நம் கண் முன்னே சூறையாடப்பட்டு வருகின்றன.
கிறித்துவ எட்டப்ப வாரிசுகள் வெளிநாட்டுப் பணத்துக்காக இன்றும் தம் தாய் மதத்தை, தாய் நாட்டை மாற்றத் துடிக்கின்றனர். நம் கண் முன்னே மாற்றியும் வருகிறார்கள்.
மோடி, யோகி ஆதித்யநாத் போன்ற தன்னலமில்லாத இந்தியத் தலைவர்களும், அண்ணாமலை, மாரிதாஸ், கார்த்திக் கோபிநாத், கிஷோர் ஸ்வாமி போன்ற புதிய தமிழக இளைஞர்களும் கொஞ்சம் நம்பிக்கை தருகிறார்கள்.
நாடெங்கும் தர்மம் ஜெயிக்குமா இல்லை தொடர்ந்து அசிங்கப்படுமா? தனிப்பட்ட முறையில் நாம் ஒவ்வொருவரும் ஆக்கபூர்வமாக என்னென்ன செய்யவேண்டும்?
நம்மையே நாம் அடிக்கடி கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி!