07/07/2020 11:35 PM
29 C
Chennai

காந்தி கொலையும் பின்ணியும் (பகுதி 100)

சற்றுமுன்...

இன்னா மிக்ஸிங்..!? சான்ஸே இல்ல..! சூப்பர் ஸ்டார் ஸாங்கு… தல தோனி ஸ்ட்ராங்கு! #HappyBirthdayDhoni

இது வேற லெவல் டா என்று பாராட்டப்பட்டு வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக தளங்களில் பகிரப்பட்டு வருகிறது அந்த வீடியோ இதுதான் .

கீழடி – கொந்தகையில் எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!

ழுமையாகத் தோண்டி சுத்தம் செய்து அதை சேதம் இல்லாத வடிவில் எடுத்துப் பார்த்தபோது அதன் அளவு 92 செ.மீ நீளம் இருந்தது.

கொரோனா பாடம் எடுத்து… டீச்சர் ஆன இன்ஸ்பெக்டர்! குவிந்த பாராட்டுகள்!

பொதுமக்களுக்கு இலவசமாக முக கவசம் வழங்கி விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்ட காவல் ஆய்வாளரை பொது மக்கள் பாராட்டினர்.

சேத்தூர்… உயிரிழந்த காவலருக்கு டி.ஐ.ஜி அஞ்சலி!

காவலர்கள் மக்களுகாக பணியாற்றியும் போது தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

கொரோனா… சென்னையில் குறையுது… மாவட்டங்களில் எகிறுது!

தமிழகத்தில் சென்னையில் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் மற்ற மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது
godse gandhi காந்தி கொலையும் பின்ணியும் (பகுதி 100)

முஸ்லீம்கள் படுகொலை செய்யப்படுவது நிறுத்தப்பட வேண்டும்,

ஹிந்துக்களின் இலக்காகி வதைப்பட்டுக் கொண்டிருக்கும் முஸ்லீம் சமுதாயத்தினரே தன்னிடம் வந்து தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாகச் சொல்ல வேண்டும்,

இரு சமுதாயத்தினரும் முன்பிருந்தது போல ஒருவருடைய பண்டிகை கொண்டாட்டங்களில் மற்றவர் கலந்துக் கொள்ள வேண்டும் என்பதே காந்தியின் எதிர்பார்ப்பாக இருந்தது.

கொந்தளித்து போயிருந்த ஹிந்துக்களிடையே மனமாற்றத்தை உருவாக்க பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

டெல்லி வாழ் ஹிந்துக்களிடையே இந்த முயற்சி சற்றே பலனளிக்க தொடங்கியது.

ஆனால்….

எண்ணிக்கையில் டெல்லியின் குடிமக்களுக்கு இணையாக இப்போது ஆகி போயிருந்த பாகிஸ்தானிலிருந்து அகதிகளாக வந்து சேர்ந்து விட்ட ஹிந்துக்கள் இந்த முயற்சியை புறம் தள்ளினர்.

உள்ளூர் தலைவர்கள்..அவர்களுக்கு யாரோ..அவர்கள் பேச்சை கேட்க வேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை..

இவர்களுக்கு என்ன தெரியும் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் பற்றி…

பாகிஸ்தானிலும்,இந்தியவிற்குள் வரும் வழி நெடுகிலும் முஸ்லீம் கயவர்களால் தாங்கள் நேரிடையாக பாதிக்கப்பட்டதே அவர்கள் மனதில் இருந்தது.

இந்த முஸ்லீம் வெறியர்களுக்காக காந்தி உண்ணாவிரதம் மேற்கொண்டதும் அதன் மூலம் மரணத்தை காட்டி பயமுறுத்துவதும் அவர்களுக்கு கோபத்தையே ஏற்படுத்தியது.

அது தவிர இப்போது பாகிஸ்தானுக்கு 55 கோடி ரூபாய் கொடுக்க ஒப்புக் கொண்டது தேசத்தை நாசப்படுத்தும் செயலாக அவர்களுக்கு தோன்றியது.

தங்களுடைய எதிர்ப்பை தெரிவிக்க அவர்கள் பிர்லா ஹவுஸ் நோக்கி கோஷங்களை எழுப்பிய வண்ணம் சென்றனர்.

பிர்லா ஹவுஸின் நுழைவாயிலில் பாதுகாப்பு காவலர்களால் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

பாதுகாப்பு காவலர்களை அவர்கள்,காதுகளால் கேட்க முடியாத ஆபாசமான வசைமொழிகளால் திட்டித் தீர்த்தனர்.

சாலையிலேயே அமர்ந்து விட்டனர்.

’ MARTHA HAI TO MARNE DO ! ‘ ( அவர் சாக விரும்பினால் சாகட்டும் ) என கோஷம் எழுப்பிய வண்ணம் இருந்தனர்.

‘ KHOONKA BADLA KHOONSE LENGE ‘ ( எங்களுக்கு இரத்தத்திற்கு பதிலாக இரத்தம் வேண்டும் ) என்பதாகவும் அவர்களின் கோஷம் அமைந்தது.

பிர்லா ஹவுஸின் கண்ணாடி ஜன்னல்களை நோக்கி கற்கள் எறியப்பட்டன.

அவர்களுடைய ஆர்ப்பாட்டம் கட்டுக்கடங்காமல் போகும் போதெல்லாம் போலீசார் தடியடி பிரயோகத்தில் ஈடுபட்டு அவர்களை கலைத்தனர்.

ஆனால்…

சில நிமிடங்களுக்கெல்லாம் அவர்கள் மீண்டும் மீண்டும் திரண்டு வந்து காந்திக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

எதேனும் ஒரு மந்திரியின் கார் பிர்லா ஹவுஸின் உள்ளேயோ வெளியோ செல்லும் போது அவர்களுடைய கோஷங்கள் காதை செவிடாக்கும் உச்சத்தை தொட்டது.

தங்கள் காதுகளில் எதுவுமே விழாதது போல மந்திரிகள் சென்றனர்.

ஆனால் நேரு வந்த போது அவர் தன் காரை நிறுத்தி..

‘’ காந்தி சாகட்டும் என்று கூறுபவர்கள் முன்னே வரட்டும்.என் கண் முன்னே அந்த வார்த்தைகளை மீண்டும் கூறட்டும்.காந்தியை கொல்லும் முன் அவர்கள் என்னை முதலில் கொல்ல வேண்டும் ‘’என்று கோபத்துடன் கூறினார்.

உடனே கூட்டம் அமைதியானது.

ஆனால் அந்த அமைதி நேரு கண் பார்வையிலிருந்து மறையும் வரைதான்.

மீண்டும் மீண்டும் கோஷங்கள் எழுப்பட்டன.

படுக்கையில் படுத்து உறங்க முயற்சித்துக் கொண்டிருந்த காந்தியை அந்த ALBUQUERQUE சாலை கோஷங்கள் மீண்டும் மீண்டும் எழுப்பிக் கொண்டிருந்தன.

‘ MARTA HAI TO MARNE DO ! KHOONKA BADLA KHOONSE LENGE ! ‘

இந்த முறை தன் உண்ணாவிரத முயற்சி வெற்றி பெறுமா எனும் சந்தேகம் காந்திக்கு எழுந்திருந்தால் ஆச்சரியமில்லை !

( தொடரும் )

  • எழுத்து: யா.சு.கண்ணன்

காந்திகொலையும்பின்னணியும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Vellithirai News

சினிமா செய்திகள் வெள்ளித்திரை நியூஸ் விமர்சனம் புகைப்படங்கள்

Dhinasari Jothidam ad காந்தி கொலையும் பின்ணியும் (பகுதி 100)

பின் தொடர்க

17,869FansLike
78FollowersFollow
70FollowersFollow
905FollowersFollow
16,500SubscribersSubscribe

உரத்த சிந்தனை

கைபரு… போலனு… ஆரியனு… வுட்ட கதையும் உடாத உண்மையும்!

கைபர் போலன் கணவாய் வழியாக வந்த ஆரிய பிராமணர்கள், இங்கு மனு தர்மப்படி மனிதர்களை பிரித்து, அவர்கள் மட்டும் கல்வி கற்கும்படி செய்துவிட்டார்கள்

சமையல் புதிது.. :

சினிமா...

விஷால் மேனேஜர் கார் கண்ணாடி உடைப்பு!

வந்து பார்த்த போது கார் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்து போலீசில் புகாரளித்துள்ளார்.

ஓடிடியில் ஷகிலா வாழ்க்கைத் திரைப்படம்! படக்குழு முடிவு!

கவர்ச்சி நடிகை ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்று படத்தையும் ஓடிடி தளத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாக தகவல்கள்

அஜித் கொடுத்த வாழ்வு: நெகிழும் பிரபல இயக்குநர்!

அஜித் அவர்கள் புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்து அவர்களுக்கும் நம்பிக்கையை தருபவர்.

பிரபல இயக்குநர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு!

தந்தை மாருதி ராவ் ஆகியோரை அடிப்படையாக வைத்து கதை இருக்கும் என்றும் பர்ஸ்ட் லுக்கை ராம் கோபால் வர்மா வெளியிட்டார்

விஜய்யால் என் வாழ்க்கையே போனது: பிரபல இயக்குநர் வேதனை!

பிரபல இயக்குனர் ஒருவர் கூறியிருப்பது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

செய்திகள்... மேலும் ...