spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைவன்முறைப் பாதை... தீர்வாகுமா?!

வன்முறைப் பாதை… தீர்வாகுமா?!

- Advertisement -

வன்முறை செய்வதன் மூலமாக எதையும் சாதித்து விடலாம் என்ற எண்ணம், சமீபகாலமாக அதிகரித்து வருகின்றது என்பதனை, நடந்துக் கொண்டு இருக்கும் சம்பவங்களைப் பார்த்தே, நம்மால் புரிந்து கொள்ள இயலும்.

வன்முறை செய்வதால் பாதிக்கப் படுவது, தனது உற்றாரோ அல்லது உறவினரோ என்ற எண்ணம் துளிக்கூட இல்லாமல், வன்முறை செய்து சாதித்து விடலாம் என்ற எண்ணம், சமீபகாலமாக மேலோங்கி வருகின்றன. இதனால், பெரிதும் பாதிக்கப் படுவது, அப்பாவி பொது மக்களே.

சிலர், திடீரென வன்முறையில் ஈடுபடுவதால், அப்பாவி மக்கள், என்ன செய்வது என தெரியாமல், திகைத்துப் போய் விடுகின்றனர், அதன் மூலம் பெரும் துன்பத்திற்கு ஆளாகி வருகின்றனர். பாதிக்கப் படுபவர்களும் தனது உடன் பிறவாத சகோதரர் – சகோதரிகள் என்னும் எண்ணம், துளிக் கூட இல்லாமல் இருப்பது வேதனையிலும் வேதனை என போராட்டத்தால் பாதிக்கப் பட்டவர்கள், கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கணக்கெடுப்பு :

அகில இந்திய அளவில், போராட்டம் அதிகம் நடைபெறும் மாநிலம் எது? என்ற ஒரு கணக்கெடுப்பு, 2015 ஆம் ஆண்டு, நடத்தப் பட்டது. அதில் தமிழகத்தில், 2015 ஆம் ஆண்டு மட்டுமே, 20 ஆயிரத்து 450 போராட்டங்கள் நடத்தப் பட்டதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அகில இந்திய அளவில், தமிழகம் முதல் இடத்தை பிடித்தது, பலருக்கு அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது.

தமிழகத்தை தொடர்ந்து பஞ்சாப் இரண்டாம் இடம் பெற்றது. அங்கு 13 ஆயிரத்து 89 போராட்டங்கள், 2015 ஆம் ஆண்டில் நடைபெற்றன.

https://www.thehindu.com/news/national/tamil-nadu/tn-records-most-number-of-protests/article17671084.ece

ஜல்லிக்கட்டு போராட்டம் :

2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டி, அதற்கு ஆதரவாக அறவழியில் போராட்டம் நடைபெற்றன. நீண்ட நாட்களாக நடைபெற்ற இந்தப் போராட்டம், கடைசியில் கலவரத்தில் முடிந்தது.

சென்னையில் உள்ள ஐஸ் ஹவுஸ் காவல் நிலையம் எரிக்கப் பட்டதுடன், அங்கு இருந்த 15 இரு சக்கர வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப் பட்டன. கலவரக்காரர்கள், காவல் நிலையம் மீது கற்களை வீசித் தாக்கியதில், 22 காவலர்கள் காயம் அடைந்தனர். பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டதுடன, பொது மக்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினார்கள்.

https://timesofindia.indiatimes.com/city/chennai/jallikattu-protest-violence-breaks-out-in-chennai-other-parts-of-tamil-nadu/articleshow/56730531.cms

ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கு எதிராக போராட்டம் :

2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், சென்னையில் உள்ள எம். ஏ. சிதம்பரம் மைதானத்தில், ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடைபெற இருந்தது. அதில் பல்லாயிரக்கணக்கான மக்கள், கிரிக்கெட் போட்டியை நேரடியாக கண்டு களிக்க, ஆர்வமுடன் மைதானம் நோக்கி வந்தனர். அவர்களில் பலர் தடுத்து நிறுத்தப் பட்டு, சிலர் தாக்கப் பட்டு, கிரிக்கெட் போட்டியை நடத்த விடாமல், போராட்டக்காரர்கள் நிறைய இடையூறு செய்தனர்.

எனினும், அதனையும் தாண்டி கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. ஆனாலும், போட்டியில் பங்கேற்ற வெளிநாட்டு வீரர் மீது செருப்பை வீசிய சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் ஆர்வலர்களுக்கு, இந்த சம்பவம் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது.

2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில், இலங்கையைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களோ அல்லது நடுவர்களோ, தமிழகத்தில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்கக் கூடாது என சிலர் போராடினார்கள்.

https://indianexpress.com/article/india/chennai-ipl-protests-live-updates-csk-vs-kkr-cauvery-protests-ma-chidambaram-stadium-5131867/

பிரதமருக்கு எதிராக போராட்டம் :

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், தமிழகத்தில் ராணுவ தளவாட உற்பத்தி மையத்தை துவக்க (Defence Expo 2018), தமிழகத்திற்கு வருகை புரிந்தார். அவர் வரும் வழி எங்கும், “கோ பேக் மோடி” (Go Back Modi) என தி.மு.க.வும், அவர்களது கூட்டணிக் கட்சியினரும், மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்தினர்.

பிரதமர் வரும் வழியில், கருப்புக் கொடி காட்டியும், கருப்பு பலூன் பறக்க விட்டும் போராட்டம் செய்தனர். ட்விட்டரில், அகில இந்திய அளவில், “GoBackModi” என டிரெண்டிங் செய்தனர். பிறகு அது, வெளிநாட்டின் சதி என கண்டு அறியப் பட்டது.

காலச் சக்கரத்தின் சூழற்சியில், அன்று பிரதமரை “வர வேண்டாம்” என சொன்னவர்களே, இப்போது ஆட்சிக்கு வந்த உடன், “தமிழகத்திற்கு வாருங்கள்” என தி.மு.க.வினர் நேரில் சந்தித்து, பாரத பிரதமருக்கு அழைப்பு விடுக்கின்றனர்.

https://www.dailyo.in/variety/go-back-modi-narendra-modi-tamil-nadu-cauvery-row-dmk-mdmk-karunanidhi-vaiko-protests-23445

கள்ளக்குறிச்சி போராட்டம் :

2022 ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 17 ஆம் தேதி, கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில், மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றது. அந்தப் பள்ளியில் நிறுத்தப் பட்டு இருந்த, 50க்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்கள், கலவரக்காரர்களால் தீ வைத்து எரிக்கப் பட்டன. அந்தப் பள்ளியில் படித்துக் கொண்டு இருந்த, 4 ஆயிரத்து 500 மாணவ – மாணவியர்களின் கல்வி சான்றிதழ்கள் மற்றும் மாற்றுச் சான்றிதழ்கள் (Transfer Certificate -T.C.) சூறையாடப் பட்டன.

குறுகிய காலத்தில், வாட்ஸ் ஆப் மூலமாக பல்வேறு வகையான குழுக்கள் ஏற்படுத்தப் பட்டு, அதன் மூலம் பொய்யான தகவல்கள் பரப்பப் பட்டு, பலரையும் ஒன்று சேர்த்து, இந்த கலவரம் நடைபெற்றதாக கூறப்பட்டு வருகின்றது.

பள்ளியில் வளர்க்கப் படும் மாடுகளை துன்புறுத்தியும், பால் தரும் மாடுகளின் காம்புகளை அறுத்தும், வாய் பேச முடியாத அந்த ஜீவன்களை, கலவரக்காரர்கள் துன்புறுத்தி உள்ளனர். மேலும் பள்ளியில் உள்ள மின் விசிறி, மேஜை, நாற்காலி, குளிர் சாதன பெட்டி என அனைத்து வகையான பொருட்களையும், கலவரக்காரர்கள் எடுத்துச் சென்றதை, நாம் தொலைக் காட்சியில் பார்த்து இருப்போம்.

போராட்டம் செய்வதால் இழப்புகளே அதிகம் :

ஒரு தேசத்தில் சரியான சூழல் அமைந்து, நல்ல முறையில் வியாபாரம் செய்யும் நிலை இருந்தால் தான், வெளிநாட்டைச் சேர்ந்தவர்களோ அல்லது நமது நாட்டைச் சேர்ந்தவர்களோ, வியாபாரத்தை தொடங்க முன் வருவார்கள். தொடர்ந்து போராடிக் கொண்டே இருந்தால், பெரும் அளவில் முதலீடுகள் செய்ய பலரும் தயங்குவார்கள்.

அதனால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி தடைபடுவதுடன், பலருக்கும் கிடைக்க வேண்டிய வேலை வாய்ப்புகள் பறி போகும் என்பதே நிதர்சனமான உண்மை. எதற்கு எடுத்தாலும் போராடுவதன் மூலமாக, அமைதியற்ற சூழல் உருவாகி, பதட்டமான நிலையே நீடிக்கும். அதனால், மக்கள் மத்தியில் ஏற்படும் அச்சத்தை தவிர்க்க இயலாது. தொடர்ச்சியான போராட்டங்கள் மூலமாக, தமிழகத்திற்கு வர வேண்டிய நிறைய முதலீடுகள் மற்ற மாநிலங்களுக்கு சென்றது. இதனால் பாதிக்கப் பட்டது யாரெனில் தமிழகமும், தமிழர்களும் தான்.

தமிழகத்திற்கும், தமிழர்களுக்கும் கிடைக்க வேண்டிய பொருளாதார உயர்வு தடுக்கப் படுவதுடன், கலவரம் செய்யும் போராட்டக் காரர்களினால் தமிழர்களின் வாழ்வு பாதிக்கப் படுவதுடன், தமிழர்களுக்கு இருக்கும் நல்ல மரியாதை குறைந்து, உலக அளவில் இது போன்ற கலவரத்தினால், பெரும் தலைகுனிவு ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பொது சொத்தைக் காப்போம்… நாட்டை நல்வழிப் படுத்துவோம்…

  • அ. ஓம் பிரகாஷ், Centre for South Indian Studies, Chennai

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,100SubscribersSubscribe