தமிழகம், திருப்பூர் மாவட்டத்தில் நேர்ந்த பேருந்து விபத்து மிகுந்த வேதனை அளிக்கிறது என்று பிரதமர் மோடி இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், தமிழ்நாடு திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற அந்த பஸ் விபத்து வேதனை அளிக்கிறது. பாதிக்கப் பட்ட குடும்பங்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன் . விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் மீண்டு குணமடையட்டும் என்று கூறியுள்ளார்.
முன்னதாக திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே, இன்று அதிகாலை, பெங்களூரில் இருந்து திருவனந்தபுரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த கேரள அரசு பஸ் ஒன்றின் மீது நிலை தடுமாறிய கண்டெய்னர் லாரி மோதி ஏற்பட்ட விபத்தில், 20 பேர் உயிரிழந்தனர்.