
இந்தியாவில் சீன உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் உணவகங்களை உடனடியாக மூட வேண்டும் என்று மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே வலியுறுத்தியுள்ளார்.
கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய- சீன ராணுவ வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணடைந்துள்ளனர். அவர்களின் உயிரிழப்பு இந்திய மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சீனாவுக்கு பதிலடி தரும் வகையில் அந்த நாட்டின் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் கோரிக்கைகள் வலுத்து வருகிறது.
இந்நிலையில், இந்திய குடியரசு கட்சித் தலைவரும் மத்திய அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே, சீன தயாரிப்புகள் அனைத்தையும் இந்திய மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். சீன உணவுகளை விற்பனை செய்யப்படும் உணவகங்கள் உடனடியாக மூட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக சீன பொருட்கள் புறக்கணிப்பு என்ற மக்களின் உணர்வுக்கு மரியாதை அளிப்பதாக பாஜக மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராம் மாதவ் கூறியிருந்தார். மேலும் அண்டை நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதை இந்தியா குறைக்க வேண்டும் என்றும் முக்கியமாக சீனாவிடம் இருந்து இறக்குமதி செய்வதை குறைக்க என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
Restaurants selling Chinese food should be banned. I appeal to people to boycott Chinese food: Union Minister Ramdas Athawale pic.twitter.com/PoY0Udfule
— ANI (@ANI) June 18, 2020