கடந்த டிசம்பர் மாதமும் இங்கே பாதுகாப்பு ஏற்பாடுகளை தவிர்த்து தனியே, எளிமையாக சென்றுவந்தார் பிரதமர். அதே போன்று இன்றைய தினமும் சென்றுவந்திருக்கிறார்.
தில்லியில் சீக்கியர்களின் புனித தலம் குருத்வாரா. சீக்கிய மதத்தின் ஒன்பதாவது குருவான ஸ்ரீ குரு தேக் பகதூரை இங்கே வணங்கி வருகிறார்கள்.
இந்த சீக்கியக் கோயிலான ரகப் கஞ்ச் சாகிப் குருத்வாராவுக்கு, கடந்த டிசம்பர் மாதத்தில், ஸ்ரீ குரு தேக் பகதூரின் நினைவு தினத்தை முன்னிட்டு வழிபட சென்றிருந்தார் பிரதமர் மோடி.
அப்போது அவர் வழக்கமான பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் செய்யாமல், முன்னேற்பாடுகளும் எதுவும் செய்யாமல், சென்று வழிபட்டு வந்தார்.
அதுகுறித்து அவர் அப்போது, வரலாற்றுச் சிறப்புமிக்க குருத்வாரா ரகப் கஞ்ச் சாகிப்பிற்குச் சென்று பிரார்த்தனை செய்தேன். அங்குதான் ஸ்ரீ குரு தேஜ் பகதூர் ஜியின் புனித உடல் தகனம் செய்யப்பட்டது.
அங்கு நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டேன். உலகமெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கானவர்களைப் போலவே, நானும் ஸ்ரீ குரு தேஜ் பகதூர் ஜியின் தயவால் ஆழமாக ஈர்க்கப்பட்டேன்.
ஸ்ரீ குரு தேஜ் பகதூர் ஜியின் 400-வது பிறந்தநாள் சிறப்பு நிகழ்வை நமது அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் கொண்டாடக் கிடைத்துள்ள வாய்ப்பு அவரது சிறப்புமிக்க கருணையாகும்.
நமக்கு ஆசீர்வதிக்கப்பட்ட மற்றும் வரலாற்று ரீதியான இந்த சந்தர்ப்பத்தில் ஸ்ரீ குரு தேஜ் பகதூர்ஜியின் கொள்கைகளைக் கொண்டாடுவோம் என்று தெரிவித்திருந்தார்.
அதே மாதிரி, இன்று குருத்வாரா சிஸ் கஞ்ச் சாஹிப்பில் ஸ்ரீ குரு தேஜ் பகதூர்ஜியின் 400 வது பிறந்த தினத்தை முன்னிட்டு, அங்கு சென்று பிரார்த்தனை செய்தார் பிரதமர் மோடி.
குருத்வாரா செல்லும்போது எந்த பாதுகாப்பு அதிகாரியையும் உடன் அழைத்து செல்லவில்லை. பிரதமர் செல்கிறார் என்பதற்காக வழியில் எந்த போக்குவரத்தையும் நிறுத்திவைத்து மக்களை காத்திருக்க செய்யவில்லை. எளிமையாக சென்று வணங்கிவிட்டு வந்தார் பிரதமர்.
இதுகுறித்து அவர், ” குரு தேக் பகதூர் ஜியின் வாழ்க்கையையும், அவரது லட்சியங்களையும், உயர்ந்த தியாகத்தையும் நாம் ஒருபோதும் மறக்க முடியாது.
அவரது தைரியமும், நலிந்தவர்களுக்கு சேவை செய்வதற்காக அவர் எடுத்த முயற்சிகளுக்காக அவர் உலகளவில் பரவலாக போற்றப்படுகிறார்.
கொடுங்கோன்மைக்கும், அநீதிக்கும் தலைவணங்க அவர் மறுத்துவிட்டார். அவரது உயர்ந்த தியாகம் பலருக்கு பலத்தையும் ஊக்கத்தையும் தருகிறது.
அவரது 400வது பிறந்த தின சிறப்பு நிகழ்வில், நான் ஸ்ரீ குரு தேக் பகதூர் ஜியை வணங்கினேன்”என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டிருக்கிறார்.
On the special occasion of his 400th Parkash Purab, I bow to Sri Guru Teg Bahadur Ji.
— Narendra Modi (@narendramodi) May 1, 2021
He is widely respected globally for his courage and his efforts to serve the downtrodden. He refused to bow to tyranny and injustice. His supreme sacrifice gives strength and motivation to many.