கொரோனா: வேண்டுகோள் விடுத்த அஸ்வின் மனைவி!

Published:

aswin3
aswin3

பிரபல கிரிக்கெட் வீரர் அஷ்வின் குடும்பத்தில் 10 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இதை ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவரது மனைவி மிக மோசமான அனுபவம், நலமாகி வருகிறோம், அனைவரும் முகக்கவசம் அணியுங்கள், தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் என வலியுறுத்தியுள்ளார்.

இந்திய அணியின் பிரபலமான சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின், ஐபிஎல் தொடரில் தில்லி கேபிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வந்தார்.

கடந்த வாரம் திடீரென ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்து வீடு திரும்பினார். ‘கொரோனா காலகட்டத்தில் குடும்பத்துடன் இருக்க விரும்புகிறேன், 2021 ஐபிஎல் தொடரிலிருந்து நாளை முதல் நான் விடைபெற்றுக் கொள்கிறேன்.

கொரோனா வைரஸுக்கு எதிராக என்னுடைய குடும்பத்தார் போராடி வரும் நிலையில் இந்த நேரத்தில் அவர்களுக்காக இந்தக் கடினமான நேரத்தில் உடன் இருப்பது அவசியம்’ என்று கூறியிருந்தார்.

ALSO READ:  FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

Related articles

Recent articles

spot_img