Homeஅடடே... அப்படியா?கிரிக்கெட் மட்டுமில்ல டான்ஸும் நல்லா ஆடுவோம்: ரோகித் சர்மா பதிவிட்ட வீடியோ!

கிரிக்கெட் மட்டுமில்ல டான்ஸும் நல்லா ஆடுவோம்: ரோகித் சர்மா பதிவிட்ட வீடியோ!

dance 1
dance 1

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து அணிக்காக தற்போது டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் தொடங்கியது

ஆட்டத்தின் முதல் நாளான நேற்று முன்தினம் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. நேற்றுமுன்தினம் ஆட்ட நேர இறுதியில் அறிமுக டெஸ்ட் போட்டியில் களமிறங்கியுள்ள ஸ்ரேயாஸ் ஐயர் 75* ரன்களுடன் களத்தில் இருந்தார்.

நேற்று இரண்டாம் நாள் ஆட்டத்தில் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் 171 பந்துகளில் 105 ரன்கள் அடித்து அசத்தினார். அத்துடன் அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் கடந்த இந்திய வீரர்கள் பட்டியலில் இணைந்தார்.

இந்நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் அடித்ததை பாராட்டும் வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ரோகித் சர்மா இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவு போட்டுள்ளார்.

அதில் ஸ்ரேயாஸ் ஐயர், ஷர்துல் தாகூர் மற்றும் ரோகித் சர்மா ஆகிய மூன்று பேரும் நடனம் ஆடும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில் மூன்று சிறப்பாக பாடல் ஒன்றுக்கு நடனமாடும் வகையில் அமைந்துள்ளது. இந்த வீடியோவை பதிவிட்டு ஸ்ரேயாஸ் ஐயர் செய்யும் ஒவ்வொரு நகர்த்தலும் சிறப்பாக அமைந்துள்ளது என்று கூறியுள்ளார்.

இந்த வீடியோவை பலரும் பார்த்து ரசித்து வருகின்றனர். அத்துடன் பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அறிமுக போட்டியில் சதம் கடந்த வீரர்களில் ரோகித் சர்மாவும் ஒருவர். தற்போது அவரை போல் மற்றொரு மும்பை வீரரான ஸ்ரேயாஸ் ஐயரும் அறிமுக டெஸ்டில் சதம் கடந்து அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

https://www.instagram.com/reel/CWu9cvSKykd/?utm_source=ig_web_copy_link

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Support us! Independent journalism that speaks truth to power and is free of corporate and political control is possible only when readers and people like you to start contributing towards the same. Please consider supporting us to run this web team for our 'Hindu Dharma'.

Most Popular

மக்கள் பேசிக்கிறாங்க

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

18,075FansLike
374FollowersFollow
53FollowersFollow
74FollowersFollow
1,980FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

COMPLAINT BOX | புகார் பெட்டி :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

அழகான மகனுடன் ஸ்ரேயா கோஷல்! வைரல்!

மகனின் புகைப்படங்களை எப்போதாவது சமூகவலைத்தளத்தில் வெளியிடுவார்.

காதலர்தினம் வருதோ… ரொமான்ஸ் வீடியோ வெளியிட்ட நட்சத்திர தம்பதி!

ஆத்யந்தா பிறந்தநாள் விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டுள்ளது.

வலிமையைத் தொடர்ந்து சித் ஸ்ரீராமின் அடுத்த அம்மா பாடல்!

சர்வானந்த் நடிப்பில் உருவாகி வரும் 'கணம்' படத்திலிருந்து அம்மா பாடல் வெளியாகியுள்ளது. தெலுங்கு நடிகர் சர்வானந்த்...

எங்கள் குடும்பப்பெயரை கெடுக்கிறார்கள்: நடிகர் சாந்தனு!

நடிகர் சாந்தனு தனது குடும்பத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி சிலர் மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும்...

Latest News : Read Now...