
மஹாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக சமூக ஊடகம் வழியே இன்று அறிவித்தார் உத்தவ் தாக்கரே.
மஹாராஷ்டிராவில் நாளை சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தலாம் என உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஊடகங்களில் வெளியானது. இதை அடுத்து, சமூக ஊடகம் வாயிலாக உத்தவ் தாக்கரே தனது ராஜினாமா குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.
அதில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிக்கிறேன். கடந்த இரண்டரை ஆண்டு கால ஆட்சி எனக்கு திருப்திகரமாக இருந்தது. பால்தாக்ரேயின் கனவுகளை நிறைவேற்றியிருக்கிறேன். எனக்கு ஆதரவு அளித்து வந்த காங்கிரஸ் தலைவர் சோனியா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உள்ளிட்ட அரசியல் தலைவர்களுக்கு நன்றி. இத்துடன் எனது முதல்வர் பதவி மற்றும் சட்டமேலவை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்கிறேன். அதிருப்தி எம்எல்ஏ.,க்கள் மும்பை வந்ததும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தெரிவிக்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.