
44ஆவது செஸ் ஒலிம்பியாட் – ஆறாம் நாள் 03.08.2022
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
இந்தியா ஆண்கள் A அணி உஸ்பெஸ்கிஸ்தான் அணியுடன் விளையாடி 2-2 என்ற புள்ளிக் கணக்கில் ட்ரா செய்தது. ஹரிகிருஷ்ணா வெற்றி பெற்றார்; விதித் குஜராதி, எரிகைசி அர்ஜுன் இருவரும் ஆட்டத்தை ட்ரா செய்தனர்; சசிகிரன் தோல்வியடைந்தார்.
இந்தியா ஆண்கள் B அணி ஆர்மேனிய அணியுடன் விளையாடி 1.5-2.5 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வியடைந்தது. தமிழக வீரர் குஹேஷ் வெற்றி பெற்றார்; சரின் நிஹால் தனது ஆட்டத்தை ட்ரா செய்தார்; அதிபன், சாத்வானி ரௌனக் இருவரும் தோல்வியடைந்தனர்.
இந்தியா B அணிக்கு இது முதல் தோல்வியாகும். இந்தியா ஆண்கள் C அணி லிதுவானியா அணியுடன் விளையாடி 3.5-0.5 என்ற புள்ளிக் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
சேதுராமன், அபிஜித் குப்தா, அபிமன்யு மூவரும் வெற்றிபெற்றனர். மற்றொரு வீரர் கங்குலி தனது ஆட்டத்தை ட்ரா செய்தார். இந்தியா பெண்கள் A அணி ஜியார்ஜியா அணியோடு விளையாடி 3-1 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது. கோனேரு ஹம்பி, ஆர். வைஷாலி இருவரும் வெற்றி பெற்றனர்.
ஹரிகா த்ரோணவள்ளி, தானியா சச்சதேவ் இருவரும் தங்களது ஆட்டத்தை ட்ரா செய்தனர். இந்தியா பெண்கள் B அணி செக் குடியரசு அணியுடன் ஆடி 2-2 என்ற புள்ளிக் கணக்கில் ட்ரா செய்தனர். வந்திகா அகர்வால், பத்மினி ரவுத், கொம்ஸ் மேரி ஆன், டிவ்யா தேஷ்முக் ஆகிய நால்வரும் தங்களது ஆட்டத்தை ட்ரா செய்து தலா அரைப் புள்ளி பெற்றனர்.
இந்தியா பெண்கள் C அணி ஆஸ்திரேலிய அணியுடன் விளையாடி 3-1 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது. கர்வாடே ஈஷா, பி.வி. நந்திதா இருவரும் தங்களது ஆட்டத்தை ட்ரா செய்தனர். சாஹிதி வர்ஷிணி, விஷ்வா வாஸ்னாவாலா இருவரும் வெற்றி பெற்றனர். ஆறாவது சுற்று முடிவில் இந்தியா ஆண்கள் A அணி 10 புள்ளிகளுடன் 6ஆவது இடத்திலும் B அணி 10 புள்ளிகளுடன் 3ஆவது இடத்திலும் C அணி 10 புள்ளிகளுடன் 9ஆவது இடத்திலும் இருக்கின்றன.
பெண்கள்பிரிவில் இந்தியா A அணி முதலாவது இடத்திலும், B அணி 15ஆவது இடத்திலும், C அணி 19ஆவது இடத்திலும் உள்ளன. நாளை ஓய்வு நாள்.