இந்தியா நியூசிலாந்து முதல் ஒருநாள் போட்டி, ஹைதராபாத், 18.01.2023
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
இந்திய அணி (349/8, ஷுப்மன் கில் 208, ரோஹித் 34, சூர்யகுமார் 31, ஹார்திக் 28, ஷிப்லி 2/74, மிட்சல் 2/30) நியூசிலாந்து அணியை (49.2 ஓவரில் 337, பிரேஸ்வெல் 140, ஃபின் அலன் 40, சிராஜ் 4/46, குல்தீப் 2/43, ஷர்துல் 2/54) 12 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டி இன்று தொடங்கியது இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் மட்டையாடிய இந்திய அணிக்கு தில் மற்றும் ரோகித் ஷர்மா நல்ல தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த ரோஹித் 34 ரன்கள் ஆட்டம் இழந்த நிலையில் விராட் கோலி மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர் .. மேலும் ஹர்திக் பாண்டியா மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோர் முறையை 31 ரன்கள் மற்றும் 28 நாட்களில் ஆட்டம் இழந்தனர்.
விக்கெட்டுகள் ஒருபுறம் விழுந்து கொண்டு இருந்தாலும் மறுமுனையில் அதிரடியாக ஆடிய சுப்மன் கில் தனது மூன்றாவது சதத்தை நிறைவு செய்தார். இறுதிவரை சிறப்பாக ஆடி அவர் இந்தப் போட்டியில் தனது முதல் இரட்டை சதத்தையும் பதிவு செய்து அசத்தினார். இதன் மூலம் இளம் வயதில் இரட்டை சதம் அடித்த இஸான் கிசானின் சாதனையை முறியடித்தார். இவர் இறுதியாக 148 பந்துகளில் 208 ரண்களுக்கு ஆட்டம் இழந்தார் இதில் 19 பவுண்டரிகளும் 9 சிக்ஸர்களும் அடங்கும். இறுதியாக இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 349 ரண்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்திருந்தது .
இதன் பின்னர் ஆடவந்த நியூசிலாந்து அணியில் ஃபின் அலன் (40 ரன்), பிரேஸ்வெல் (140 ரன்), சாண்ட்னர் (57 ரன்) ஆகியோர் சிறப்பாக ஆடினர். பிற வீரர்கள் சோபிக்கவில்லை. மைக்கேல் பிரேஸ்வெல்லின் அற்புதமான எதிர்-தாக்குதல் (78 பந்துகள், 140 ரன், 12 ஃபோர், 10 சிக்சர்) இந்த போட்டியை ஒரு மறக்க முடியாத ஆட்டமாக மாற்றியது. அவர் ஒரு பந்தில் ஏறக்குறைய இரண்டு ரன்கள் எடுத்தார், நியூசிலாந்து 6 விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்திருந்தது.
மேலும் மீதமுள்ள 20 ஓவர்களில் ஓவருக்கு 11 ரன் எடுக்க வேண்டிய நிலையில் இருந்தது. மறுமுனையில் சான்ட்னர் இருந்தார். பந்து வீச்சாளர்கள் ஒருவர் பின் ஒருவராக சரியாகப் பந்துவீசமுடியாமல் திணறினர். இது ஒரு கட்டத்தில் இந்திய பந்துவீச்சாளர்களைப் பயமுறுத்தியது.
அவர் சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக பயமின்றி களமிறங்கினார். பந்து வீச்சாளர்களுக்கு எந்த வாய்ப்பும் கொடுக்கவில்லை சிராஜ் மற்றும் ஷமி மட்டுமே தங்கள் அனுபவத்துடனும் துல்லியத்துடனும் இந்தியாவை இறுதியில் வெற்றி பெற வைத்தனர்.
ஆட்ட நாயகனாக சுப்மன் கில் அறிவிக்கப்பட்டார். இந்திய அணி 1-0 என்ற புள்ளிக் கணக்கில் இத்தொடரில் முன்னணியில் உள்ளது. அடுத்த போட்டி ராய்ப்பூரில் 21ஆம் தேதி நடக்கும்.