- Advertisements -
Home இந்தியா ’சங்கராபரணம்’ இயக்குனர் கே.விஸ்வநாத் காலமானார்

’சங்கராபரணம்’ இயக்குனர் கே.விஸ்வநாத் காலமானார்

இந்தியத் திரையுலகின் மூத்த இயக்குனர்களுள் ஒருவரான கே.விஸ்வநாத் தமது 93வது வயதில் காலமானார்.

- Advertisements -

இந்தியத் திரையுலகின் மூத்த இயக்குனர்களுள் ஒருவரான கே.விஸ்வநாத் தமது 93வது வயதில் காலமானார்.

இந்தியத் திரையுலகின் மூத்த இயக்குனர்களில் முக்கியமானவராகத் திகழ்ந்தவர் கே.விஸ்வநாத். தெலுகு திரையுலகில் சிறப்பான திரைப்படங்களை அளித்தவர். 1965ஆம் ஆண்டில் இயக்குனராக அறிமுகமான கே.விஸ்வநாத், தான் இயக்கிய முதல் படமான ‛ஆத்ம கவுரவம்’ படத்துக்கு சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த படத்துக்கான நந்தி விருதைப் பெற்றார்.

அவர் இயக்கிய 53 படங்களுள் ‛சங்கராபரணம், சாகரசங்கமம், ஸ்ரீவெண்ணிலா, ஸ்வாதிமுத்யம், சூத்ரதாரலு, ஸ்வராபிஷேகம்’ உள்ளிட்ட பல படங்கள் காலம் கடந்தும் சினிமா ரசிகர்களால் பாராட்டப்படுபவை.

- Advertisements -

தமிழில் கமல்ஹாசனை வைத்து இவர் இயக்கிய சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து ஆகியவை அவரது சிறப்பைப் பறைசாற்றும். மேலும் குருதிப்புனல், முகவரி, ராஜபாட்டை, யாரடி நீ மோகனி, லிங்கா, உத்தம வில்லன் உள்ளிட்ட திரைப்படங்களிலும் அவர் நடித்துள்ளார்.

திரையுலகுக்கு அவர் ஆற்றிய சேவையை பாராட்டி, இந்திய சினிமாவின் உயரிய விருதான ‛தாதா சாகேப் பால்கே’ விருது, இந்திய அரசின் மரியாதைக்குரிய பத்ம ஸ்ரீ விருது ஆகியவை இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. 7 முறை நந்தி விருது, 5 முறை தேசிய விருது, 11 முறை பிலிம் பேர் விருது பெற்றவர்!

வயது முதிர்வின் காரணமாக சினிமாவிலிருந்து விலகி ஹைதராபாத்தில் தன் குடும்பத்தாருடன் ஓய்வில் இருந்தார். இந்நிலையில் அவர் வியாழக்கிழமை நேற்று காலமானார். அவரது மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கே.விஸ்வநாத் குறித்து…

📌இந்தியத் திரையுலகின் மூத்த இயக்குனர்களுள் ஒருவர் கே.விஸ்வநாத் (92). 1965-ம் ஆண்டில் இயக்குனராக அறிமுகமான கே.விஸ்வநாத், தான் இயக்கிய முதல் படமான ‘ஆத்ம கவுரவம்’ படத்துக்கு சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த படத்துக்கான நந்தி விருதை வென்றார்.

📌தமிழில் சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

📌மேலும், குருதிப்புனல், முகவரி, ராஜபாட்டை, யாரடி நீ மோகனி, லிங்கா, உத்தம வில்லன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

📌இந்திய சினிமாவின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது மற்றும் பத்ம ஸ்ரீ’விருது வழங்கி இந்திய அரசு கவுரவித்துள்ளது.

📌7 முறை நந்தி விருது, 5 முறை தேசிய விருது வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

📌வயது மூப்பால் கடந்த சில காலமாகவே சினிமாவில் இருந்து விலகி ஹைதராபாத்தில் தனது குடும்பத்துடன் ஓய்வெடுத்து வந்தார். அவ்வப்போது பல்வேறு கலைஞர்களைத் தன் வீட்டில் சந்தித்து அவர்களுடன் உரையாடி வந்தார்.

📌கடந்த நவம்பர் மாதம், நடிகர் கமல்ஹாசன் அவரை நேரில் சந்தித்து ஆசிபெற்றிருந்தார். இந்நிலையில், ஹைதராபாத் இல்லத்தில் கே.விஸ்வநாத் நேற்று நள்ளிரவில் காலமானார். அவரது மறைவுக்கு இந்திய திரையுலகினர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

- Advertisements -

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × 1 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.