தமிழில்: முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்
வணக்கம் சௌராஷ்டிரா! வணக்கம் தமிழ்நாடு!
குஜராத் முதல்வர் ஸ்ரீ பூபேந்திர பாய் படேல், நாகாலாந்து ஆளுநர் ஸ்ரீ எல்.ஜி. கணேசன் அவர்களே, ஜார்கண்ட் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களே, மத்திய அமைச்சரவையில் எனது நண்பர், சகோதரர் புருஷோத்தம் ருபாலா அவர்களே, எல் முருகன் அவர்களே, மீனாட்சி லேகி அவர்களே, இந்த நிகழ்வில் தொடர்புடைய பிற பிரமுகர்களே, பெரியோர்களே, தாய்மார்களே சௌராஷ்டிர தமிழ் சங்கமம், நிகழ்ச்சியில், பாகு பெற வந்திருக்கும், தமிழ் சொந்தங்கள் அணைவரையும், வருக வருக என் வரவேற்கிறேன். உங்கள் அனைவரையும், குஜராத் மண்ணில், இன்று சந்தித்ததில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
தோழர்களே,
விருந்தோம்பலின் இன்பம் மிகவும் தனித்துவமானது என்பது உண்மைதான். ஆனால், ஒருவர் தனது சொந்த வருடங்கள் கழித்து வீடு திரும்பினால், அந்த மகிழ்ச்சி, அந்த உற்சாகம் மற்றும் மகிழ்ச்சியின் விஷயம் வேறு. இன்று அதே மனதுடன், சௌராஷ்டிராவைச் சேர்ந்த ஒவ்வொருவரும் தமிழ்நாட்டிலிருந்து வந்திருக்கும் தங்கள் சகோதர சகோதரிகளை வரவேற்கத் தங்கள் இமைகளை விரித்துள்ளனர். இன்று, அதே பெருமைமிக்க இதயத்துடன், தமிழ்நாட்டைச் சேர்ந்த எனது நெருங்கிய மற்றும் அன்பானவர்களிடையே நானும் காணொளி மூலமாகப் பங்கேற்கிறேன்.
2010இல் நான் முதலமைச்சராக இருந்த போது மதுரையில் இவ்வளவு பிரம்மாண்டமான சௌராஷ்டிர சங்கத்தை ஏற்பாடு செய்திருந்தேன் என்பது எனக்கு நினைவிருக்கிறது. சௌராஷ்டிராவில் இருந்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நமது சகோதர சகோதரிகள் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்தனர். இன்றும், சௌராஷ்டிர தேசத்தில் பாசமும் சொந்தமும் நிறைந்த அதே அலைகள் காணப்படுகின்றன. நீங்கள் அனைவரும் தமிழ்நாட்டிலிருந்து உங்கள் முன்னோர்களின் பூமிக்கு, உங்கள் வீடுகளுக்கு இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் வந்திருக்கிறீர்கள். உங்கள் முகத்தில் உள்ள மகிழ்ச்சியைப் பார்க்கும்போது, நீங்கள் இங்கிருந்து நிறைய நினைவுகளையும் உணர்ச்சிகரமான அனுபவங்களையும் திரும்பப் பெறுவீர்கள் என்று என்னால் சொல்ல முடியும்.
நீங்கள் சௌராஷ்டிரா சுற்றுலாவையும் மிகவும் ரசித்திருக்கிறீர்கள். சௌராஷ்டிரா முதல் தமிழகம் வரை நாட்டை இணைக்கும் சர்தார் படேலின் ஒற்றுமை சிலையையும் பார்த்திருப்பீர்கள். அதாவது, கடந்த காலத்தின் விலைமதிப்பற்ற நினைவுகள், நிகழ்காலத்தின் தொடர்பு மற்றும் அனுபவம், எதிர்காலத்திற்கான தீர்மானங்கள் மற்றும் உத்வேகங்கள், இவை அனைத்தையும் ஒன்றாக ‘சௌராஷ்டிரா-தமிழ் சங்கமத்தில்’ காண்கிறோம். இந்த அற்புதமான நிகழ்வுக்காக சௌராஷ்டிரா மற்றும் தமிழ்நாட்டு மக்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன், உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன்.
நண்பர்களே,
சுதந்திரத்தின் அமிர்தப் பெருவிழாக் காலத்தில், சௌராஷ்டிரா-தமிழ் சங்கமம் போன்ற கலாச்சார நிகழ்வுகளின் புதிய பாரம்பரியத்தை நாம் இன்று காண்கிறோம். காசி-தமிழ் சங்கமம் சில மாதங்களுக்கு முன்பு பனாரஸில் ஏற்பாடு செய்யப்பட்டது, இது நாடு முழுவதும் பரவலாக விவாதிக்கப்பட்டது. அதன் பிறகு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இதுபோன்ற பல தன்னெழுச்சியான முயற்சிகள் தொடங்கியுள்ளன. மேலும், இன்று மீண்டும் சௌராஷ்டிரா நிலத்தில் இந்தியாவின் இரண்டு பழமையான நீரோடைகளின் சங்கமத்தை நாம் காண்கிறோம்.
இந்த ‘சௌராஷ்டிர தமிழ் சங்கமம்’ நிகழ்வு குஜராத் மற்றும் தமிழ்நாட்டின் சங்கமம் மட்டுமல்ல. இது மீனாட்சி தேவி மற்றும் பார்வதி தேவியின் வடிவில் ‘ஒரு சக்தி’ வழிபாட்டின் கொண்டாட்டமாகும். இது சோம்நாத் மற்றும் ராம்நாத் வடிவில் உள்ள ‘ஒரே சிவன்’ என்ற பாவனையின் கொண்டாட்டமாகும். இந்த சங்கமம் நாகேஸ்வரர் மற்றும் சுந்தரேஸ்வரர் பூமிகளின் சங்கமமாகும். இது ஸ்ரீ கிருஷ்ணர் மற்றும் ஸ்ரீ ரங்கநாதரின் சங்கமமாகும். நர்மதையும் வைகையும் சங்கமிக்கும் இடம் இது. தண்டியாவும் கோலாட்டமும் இணையும் இடம் இது! துவாரகை, மதுரை போன்ற புனித நகரங்களின் மரபுகளின் சங்கமம் இது! மேலும், இது சௌராஷ்டிரா-தமிழ் சங்கமம் சங்கமம் – சர்தார் படேல் மற்றும் சுப்பிரமணிய பாரதியின் தேசத்தின் முதல் உறுதிப்பாடு! இந்த தீர்மானங்களுடன் நாம் முன்னேற வேண்டும். இந்த கலாச்சார பாரம்பரியத்தை எடுத்துக்கொண்டு தேசத்தை கட்டியெழுப்ப நாம் முன்னேற வேண்டும்.
நண்பர்களே,
இந்தியா என்பது பன்முகத்தன்மையை ஒரு சிறப்பு எனக் கொண்டு வாழும் நாடு. நாம் பன்முகத்தன்மையைக் கொண்டாடும் மக்கள். வெவ்வேறு மொழிகள் மற்றும் பேச்சுவழக்குகள், பல்வேறு கலைகள் மற்றும் வகைகளை நாங்கள் கொண்டாடுகிறோம். நமது நம்பிக்கை முதல் ஆன்மீகம் வரை எல்லா இடங்களிலும் பன்முகத்தன்மை உள்ளது. நாம் சிவனை வணங்குகிறோம், ஆனால் பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களில் வழிபடும் முறை அதன் சொந்த மாறுபாடுகளைக் கொண்டுள்ளது. ஏகோ அஹம் பஹு ஸ்யாம்’ என்று பல்வேறு வடிவங்களில் பிரம்மத்தை ஆராய்ந்து வணங்குகிறோம். ‘கங்கே சா யமுனே சைவ, கோதாவரி சரஸ்வதி’ போன்ற மந்திரங்களில் நாட்டின் பல்வேறு நதிகளை வணங்குகிறோம்.
இந்தப் பன்முகத்தன்மை நம்மைப் பிரிக்காது, ஆனால் நமது பிணைப்பை, நமது உறவை பலப்படுத்துகிறது. ஏனென்றால், வெவ்வேறு நீரோடைகள் ஒன்று சேரும்போது, ஒரு சங்கமம் உருவாகிறது என்பது நமக்குத் தெரியும். எனவே, கும்பமேளா போன்ற நிகழ்வுகளில் நதிகளின் சங்கமம் முதல் கருத்துகள் சங்கமம் வரை பல நூற்றாண்டுகளாக இந்த மரபுகளை நாம் வளர்த்து வருகிறோம்.
இதுவே சங்கத்தின் சக்தியை சௌராஷ்ட்ர தமிழ் சங்கம் இன்று புதிய வடிவில் முன்னெடுத்து வருகிறது. இன்று, நாட்டின் ஒருமைப்பாடு, இத்தகைய மாபெரும் விழாக்களாக உருவெடுக்கும் போது, சர்தார் சாஹிப் அதாவது சர்தார் படேல் அவர்கள் நம்மை ஆசீர்வதித்திருக்க வேண்டும். ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்ற கனவைக் கண்டு, தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த, நாட்டின் ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகள் இதனால் நனவாகும்.
நண்பர்களே,
இன்று, நாம் சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், நாடு தனது ‘பாரம்பரியத்தின்’ ‘பஞ்ச பிராணனை’ அழைத்துள்ளது. அதை அறியும் போது நமது பாரம்பரியத்தின் பெருமை மேலும் அதிகரிக்கும், அடிமை மனப்பான்மையிலிருந்து விடுபட்டு நம்மை அறிய முயலுங்கள்! காசி தமிழ் சங்கமாக இருந்தாலும் சரி, சௌராஷ்டிர தமிழ் சங்கமாக இருந்தாலும் சரி, இந்த நிகழ்வு அதற்கான பயனுள்ள பிரச்சாரமாக மாறி வருகிறது.
நீங்கள் பார்க்கிறீர்கள், குஜராத் மற்றும் தமிழ்நாட்டிற்கு இடையே எவ்வளவோ விஷயங்கள் உள்ளன, அவை வேண்டுமென்றே நமக்குத் தெரியாமல் மறைக்கப்பட்டுள்ளன. அயல்நாட்டுப் படையெடுப்புகளின் போது சௌராஷ்டிராவிலிருந்து தமிழ்நாட்டிற்கு இடம்பெயர்ந்ததைப் பற்றிய ஒரு சிறிய விவாதம் சில வரலாற்று அறிஞர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் அதற்கு முன்பே, புராண காலத்திலிருந்தே இவ்விரு சாம்ராஜ்யங்களுக்கும் இடையே ஆழமான தொடர்பு இருந்து வருகிறது. சௌராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு, மேற்கு மற்றும் தெற்கின் இந்த கலாச்சார இணைவு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இயக்கத்தில் உள்ள ஒரு ஓட்டம்.
நண்பர்களே,
இன்று 2047இல் இந்தியா என்பதை இலக்காகக் கொண்டுள்ளோம். அடிமைத்தனத்தின் சவால்கள் மற்றும் ஏழு தசாப்தங்கள் எங்களுக்கும் உள்ளன. நாம் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும், ஆனால் வழியில் நம்மை உடைக்கும் சக்திகளும் நம்மை தவறாக வழிநடத்தும் நபர்களும் இருப்பார்கள். ஆனால், மிகவும் கடினமான சூழ்நிலையிலும் புதுமைகளை உருவாக்கும் ஆற்றல் இந்தியாவுக்கு உள்ளது, சௌராஷ்டிரா மற்றும் தமிழ்நாட்டின் பகிரப்பட்ட வரலாறு இந்த உறுதியை நமக்கு அளிக்கிறது.
அன்னியப் படையெடுப்பாளர்கள் இந்தியாவைத் தாக்கத் தொடங்கிய போது, பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, சோம்நாத் வடிவத்தில் நாட்டின் கலாச்சாரம் மற்றும் கௌரவத்தின் மீது பெரிய தாக்குதல் நடந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். தகவல் தொழில்நுட்பத்தின் சகாப்தம் இல்லை, பயணத்திற்கு விரைவு ரயில்கள் மற்றும் விமானங்கள் இல்லை. ஆனால், நம் முன்னோர்கள் அறிந்ததே – இமயமலை சமரப்ய, யாவத் இந்து சரோவரம்
தம் தேவ நிர்மிதம் தேசம் ஹிந்துஸ்தானம் பிரசக்ஷதே.
அதாவது இது அந்தக் கடவுள் உருவாக்கிய நாடு, அதாவது, இமயமலை முதல் இந்தியப் பெருங்கடல் வரை, இந்த முழு தேவபூமி நமது சொந்த நாடு இந்தியா. அதனால் தான், புதிய மொழி, புதிய மனிதர்கள், புதிய சூழல், தொலைவில் இருக்கும் பகுதி, அப்படியானால் அங்கு எப்படி வாழமுடியும் என்று அவர்கள் கவலைப்படவில்லை.
சௌராஷ்டிராவிலிருந்து தமிழ்நாட்டிற்கு ஏராளமான மக்கள் தங்கள் நம்பிக்கையையும் அடையாளத்தையும் பாதுகாக்க குடிபெயர்ந்தனர். தமிழ்நாட்டு மக்கள் அவர்களை இருகரம் நீட்டி வரவேற்றனர், புதிய வாழ்வுக்கான நிரந்தர வசதிகள் அனைத்தையும் நீட்டினர். ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்பதற்கு பெரிய மற்றும் உயர்ந்த உதாரணம் எதுவாக இருக்க முடியும்?
நண்பர்களே,
அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்.
அதாவது மகிழ்ச்சி-வளம் மற்றும் அதிர்ஷ்டம், பிறரைத் தங்கள் வீட்டிற்குள் மகிழ்ச்சியுடன் வரவேற்பவர்களுடன் தங்கியிருக்கும் என்று மகான் திருவள்ளுவர் கூறினார். எனவே, நாம் நல்லிணக்கத்தை வலியுறுத்த வேண்டும், கலாச்சார மோதலை அல்ல. நாம் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டியதில்லை, சங்கங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும், போராட்டங்களை அல்ல. நாம் வேறுபாடுகளைக் கண்டுபிடிக்க விரும்பவில்லை, உணர்ச்சிபூர்வமான தொடர்புகளை உருவாக்க விரும்புகிறோம்.
சௌராஷ்டிரத்தை பூர்வீகமாகக் கொண்ட தமிழகத்தில் குடியேறியவர்கள், தமிழ் மக்களுடன் வாழ்ந்து காட்டியுள்ளனர். நீங்கள் அனைவரும் தமிழை ஏற்றுக்கொண்டீர்கள், ஆனால் அதே நேரத்தில் சௌராஷ்டிராவின் மொழி, உணவு மற்றும் பழக்கவழக்கங்களை நினைவில் வைத்தீர்கள். அனைவரையும் அழைத்துச் சென்று உள்ளடக்கி முன்னேறி, அனைவரையும் ஏற்று முன்னேறிச் செல்லும் இந்தியாவின் அழியாத பாரம்பரியம் இது.
நம் முன்னோர்களின் பங்களிப்பை நாம் அனைவரும் கடமை உணர்வுடன் முன்னெடுத்துச் செல்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்களை உள்ளூர் மட்டத்திலும் அதே வழியில் அழைத்து, அவர்களுக்கு இந்தியாவை அறிந்து வாழ வாய்ப்பளிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்த திசையில் சௌராஷ்டிர தமிழ் சங்கமம் ஒரு வரலாற்று முயற்சியாக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
இந்த உணர்வோடு, மீண்டும் ஒருமுறை தமிழ்நாட்டில் இருந்து இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் வந்திருக்கிறீர்கள். நான் நேரில் வந்து உங்களை அங்கே வரவேற்றிருந்தால், நான் அதை நன்றாக ரசித்திருப்பேன். ஆனால் நேரமின்மையால் வரமுடியவில்லை. ஆனால் இன்று உங்கள் அனைவரையும் காணொளியில் தரிசனம் செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. ஆனால் இந்த முழு சங்கமத்திலும் நாம் கண்ட ஜீவனை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அந்த உணர்வை நாம் வாழ வைக்க வேண்டும். அந்த உணர்வுக்காக நமது வருங்கால சந்ததியினரையும் தயார்படுத்த வேண்டும். இந்த உள்ளத்தில் இருக்கும் உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி! வணக்கம்!