விவசாயி தற்கொலைக்கு ஆம் ஆத்மியே காரணம்: தில்லி போலீஸ்

புது தில்லி: தில்லியில் ஆம் ஆத்மி பேரணியின் போது, விவசாயி கஜேந்திர சிங் தற்கொலை செய்து கொண்டதற்கு ஆம்ஆத்மியே காரணம் என்று போலீசார் கொடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர். விவசாயி கஜேந்திரசிங் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொள்ள ஆம்ஆத்மி தொண்டர்கள் தான் கை தட்டி தூண்டி விட்டனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால், இந்தக் குற்றச்சாட்டுக்கு ஆம் ஆத்மி கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது.