மதுரை: தமிழக அரசு தரும் திட்டங்களை பொதுமக்கள் உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என, தமிழக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் கேட்டுக் கொண்டார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு அவர் வழங்கி பேசியது:
கொரோனா காலத்தில், ஊரடங்கின்போது, அரசு விதிக்கும் கட்டுபாடுகளை பொதுமக்கள் கடைபிடித்தால் தான், நாம் நோய் தாக்கத்தை குறைக்க முடியும். முகக் கவசம் என்பது, நம்மை நோய் தொற்றிலிருந்து காப்பாற்ற உதவுகிறது.
நோயை கட்டுப்படுத்த தான், அரசு இயந்திரம் இரவு, பகல் பராமல் செயல்பட்டு வருகிறது. அரசு அலுவலர்களும் ஓய்வின்றி, தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.
பொதுமக்களின் பங்களிப்பு இருந்தால் தான், மதுரை மாவட்டத்தில் நோயின் தாக்கத்தை குறைக்க முடியும்.
நோயை கண்டறிய கணக்கு எடுக்கும் பணியானது முழூவுச்சில் நடைபெறுகிறது என்றார்.
இந்த நிகழ்ச்சிக்கு, மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் தலைமை வகித்தார். மதுரை மாநகராட்சி ஆணையர் விசாகன், மதுரை தெற்கு சட்டப்பேரவை உறுப்பினர் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை